பட்டும் படாமல் பேசிய நயினார்.. அப்செட்டான சரத்குமார்.. இப்படி ஒரு முடிவா? திருப்பமா இருக்கே!
சென்னை: பாஜகவில் இணைந்துவிட்ட நடிகர் சரத்குமார், மிகுந்த விரக்தியில் இருப்பதால் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை துவக்கலாமா? எனும் யோசனையில் இருக்கிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வந்தவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கட்சியை தமிழக பாஜகவோடு இணைத்தார். இணைப்பதற்கு முன்பாக, பாஜக தலைமை சரத்குமாருக்கு சில உத்தரவாதங்களைக் கொடுத்தது.
குறிப்பாக, மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பதவிகள், சட்டமன்ற தேர்தலின் போது உங்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்கிற உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது.

முக்கிய நடவடிக்கை
இதற்கு இடையேதான் பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக எந்த தலைவர் வந்தால் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கம். அதாவது கடந்த தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவார்கள். அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளார்.
அண்ணாமலைக்காக பணியாற்றிய.. கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை கூண்டோடு தூக்கும் திட்டத்தில் நயினார் இருக்கிறாராம். அதோடு ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். ஒரு சிலர் இன்னமும் முன்னாள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களை தூக்கும் திட்டத்திலும் நயினார் இருக்கிறாராம்.
சென்னையில் ரவுடிகள் பலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. இதை கணக்கெடுப்பு மேற்கொண்டு சரி செய்ய.. பலரை நீக்கவும் நயினார் திட்டமிட்டு உள்ளாராம். பாஜகவின் பல வருட திட்டம் பூத் கமிட்டி அமைப்பது. அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம்.
நயினாரை சந்தித்த சரத்குமார்
இந்த நிலையில், பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேரில் சென்று அவரை வாழ்த்தினார். அப்போது, தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதம் குறித்து அவருக்கு நினைவுப்படுத்திய சரத்குமார், மாநில அளவில் எனக்கு என்ன பதவி தரப்போகிறீர்கள் ? தென் மாவட்டங்களில் 10-ம், மற்ற மாவட்டங்களில் 5-ம் எனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட தலைவர் பதவி தருவதாகச் சொல்லப்பட்டது.
பதவி பொறுப்பு இல்லை
ஆனால், தரவில்லை. எனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட பொறுப்புகள் என்ன தரப்படப்போகிறது ? மாநில அளவிலான பதவிகள் அவர்களுக்கு தர வேண்டும். குறிப்பாக, பாஜகவின் முக்கிய அணிகளின் தலைவர்களாக அவர்களை நியமிக்க வேண்டும். சிலருக்கு மாநில செயலாளர் பொறுப்பு தரவேண்டும் என்றெல்லாம் ஒரு நீண்ட பட்டியலை வாசித்திருக்கிறார் சரத். இதற்கு எந்த பதிலையும் சொல்லாத நயினார், ''கட்சிக்கு தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டப்பிறகுதான் தமிழக பாஜகவின் நியமன பதவிகள் விசயத்தில் கவனம் போகும்.
அதனால் ஆகட்டும் பார்க்கலாம். உங்களுக்கோ உங்கள் ஆதரவாளர்களுக்கோ பொறுப்பு கொடுப்பதுங்கிறது தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்'' என்று பட்டும் படாமல் பேசியிருக்கிறார். நயினாரின் இந்த பதில் சரத்துக்கு திருப்தியளிக்கவில்லை. இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் பேசியிருக்கிறார். சூழலையும் விவரித்திருக்கிறார் சரத். அப்போது அவரது பேச்சில் விரக்தி வெளிப்பட்டிருக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாத அவரது ஆதரவாளர்கள், '' தலைவரே கலங்காதீர்கள் ; உங்கள் கம்பீரத்தை நீங்கள் இழக்கக்கூடாது. மீண்டும் கட்சியைத் துவக்குங்கள். நமது பலத்தை நிரூபிப்போம். சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை கவனம் செலுத்தி அதில் வெற்றிபெற்று காட்டுவோம் '' என்று வலியுறுத்தியுள்ளனர்
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications