சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"40 தொகுதிகளிலும் தெறிக்க விடலாமா".. அப்படியே ஸ்டன் ஆன சமக நிர்வாகிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    '40 தொகுதிகளிலும் தெறிக்க விடலாமா'அதிர்ச்சியில் சமக நிர்வாகிகள்!

    சென்னை: தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது சமத்துவ மக்கள் கட்சி தான் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள ச.ம.க.தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

    பொதுக் குழுக் கூட்டத்தில் பேசியபோது சரத்குமார் அதிரடியாக ஒருவரையும் விடவில்லையாம். ரஜினி, கமல், எடப்பாடி, ஓ.பி.எஸ், மோடி, ஸ்டாலின் என எல்லோரையும் ஒரு பிடி பிடித்துள்ளார்.

    அதிமுகவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. பின்னணி என்ன? அதிமுகவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. பின்னணி என்ன?

    தினகரன் மீது கப்சிப்

    தினகரன் மீது கப்சிப்

    ஆனால், டி.டி.வி.தினகரனை பற்றி தப்பி தவறிக்கூட ஒரு வார்த்தை பேசவில்லையாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னை கூட்டணியில் இணைத்திருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார், பாவம் அவருக்கு கூட்டணி கணக்கு பற்றிய புரிதல் இல்லாதவர் என சரத் ஆவேசம் காட்டினார்.

    ராமதாஸ் - அன்புமணி

    ராமதாஸ் - அன்புமணி

    மேலும், பா.ம.க.நிறுவனர் ராமதாசையும், அவரது மகன் அன்புமணியையும் சகட்டுமேனிக்கு பிளந்து கட்டியவர், தான் ஒரு போதும் பாஜக கூட்டணியில் எந்தக்காலத்திலும் சேரமாட்டேன் என பேசினார்.

    தெறிக்க விடலாமா

    தெறிக்க விடலாமா

    மாவட்ட நிர்வாகிகளை பார்த்து 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாமா எனக் கேள்வி எழுப்பிய அவர், யார் தொகுதிக்கு 15- 20 லட்சம் வரை செலவு செய்ய முடியுமோ அவர்கள் சொல்லுங்கள் என ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டார்.

    ஈயாடவில்லை

    ஈயாடவில்லை

    சரத்தின் பேச்சைக் கேட்டு முன் வரிசையில் இருந்த நிர்வாகிகள் பலரும் எச்சிலை விழுங்கியபடி திகைத்துபோயினர். கூட்டம் முடிந்து வெளியேறிய நிர்வாகிகள் தரப்பில் நாம் பேசிய போது, 2011, 2016 தேர்தல்களில் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற விவகாரங்களில் அதிமுக சரத்தை ஏமாற்றியதே அவர் வெகுண்டெழ காரணம் எனத் தெரிவித்தனர்.

    ரொம்ப லென்த்தா போகுதே

    ரொம்ப லென்த்தா போகுதே

    எல்லாம் சரி, டி.டி.வி.உடனான பேச்சுவார்த்தை எப்படி போகுது என்ற கேள்விக்கு சிரிப்பை பதிலாக தந்து நகர்ந்தனர். அப்படீன்னா எப்பதான் கூட்டணி முடிவாகம், எப்படித்தான் முடிவாகுமோ. ரொம்ப லென்த்தா போகுதே!

    English summary
    AISMK leader Sarath Kumar stunned his party leaders by asking them can we contest in all 40 seats in TN and Puducherry?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X