சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல
சென்னை: தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் கட்சி தொடங்கி தடம் பதிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல.. அந்த வரிசையில் நடிகர் சரத்குமார் தனது ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.. தொடக்க காலத்தில் திமுகவில் பயணித்த அவர், பின்னர் சொந்தக் கட்சியைத் தொடங்கி அரசியலில் ஒரு தனி இடத்தைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை.. இப்போதாவது சமகவுக்கு வளமான எதிர்காலம் கிடைக்குமா? என்ற ஆர்வத்தில் காத்திருக்கிறாராம்.
கடந்த 2011ல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் சமக சரத்குமார்.. இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது.

சரத்குமாரின் சமக
ஆனால் 2016 தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்குத் தோல்வியே மிஞ்சியது..
அதன்பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் சமகவின் செல்வாக்கு சற்று குறையத் தொடங்கியது. இதற்கிடையே எதிர்பாராத திருப்பமாக, கடந்த 2 வருஷத்துக்கு முன்பு தனது கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்தார். இந்த இணைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாஜகவில் ஐக்கியம்
தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேசிய கட்சியில் உரிய அங்கீகாரமும், முக்கிய பொறுப்புகளும் கிடைக்கும் என்று அவர் பெரிதும் நம்பினார். ஆனால் கடந்த 2 வருடங்களாகவே அவர் எதிர்பார்த்த எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் வெடித்து கிளம்பி உள்ளதாம்.
பாஜகவில் இணைந்த பிறகு சரத்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுவதாக ஒரு பேச்சும் தற்போது எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரத்குமார் சமீபத்தில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பொறுத்தார் பூமியாழ்வார்
அதில், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவிதப் பொறுப்புகளும் வழங்கப்படாத நிலையிலும், தனது தொண்டர்கள் சோர்வடையாமல் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளார். அதாவது "பொறுத்தார் பூமியாழ்வார்" என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ள அவர், அங்கீகாரம் கிடைக்காதது குறித்த தனது வருத்தத்தை மறைமுகமாகவும் பதிவு செய்துள்ளார்.
குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது, பாஜகவில் நீடிப்பாரா அல்லது புதிய முடிவை எடுப்பாரா என்ற கேள்வியை சமக தொண்டர்களிடம் எழுப்பி வருகிறதாம்..
திமுக பக்கம் தாவலாம்
இப்போது நிலவும் சூழலை வைத்து பார்த்தால், சரத்குமார் மறுபடியும் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆரம்பகாலத்தில் திமுகவில் இருந்தவர் என்பதால், அங்கே செல்வது அவருக்குப் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஒருவேளை சரத்குமார் திமுக கூட்டணியில் இணைந்தால், சமகவின் பழைய நிர்வாகிகளுக்கு மீண்டும் ஒரு புத்துயிர் கிடைக்க வாய்ப்பிருக்குமாம்..
பலன் கிடைக்குமா?
இருந்தாலும் ஏற்கனவே பலமான கூட்டணிக் கட்சிகளைக் கொண்டுள்ள திமுகவில், சரத்குமாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஒருவேளை அவருக்கு உரிய சீட்கள் வழங்கப்பட்டால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை தக்கவைக்க திமுகவுக்கு அது உதவியாக இருக்கும்..
சரத்குமாரின் இந்த அதிருப்தி போக்கு பாஜக தலைமைக்கு ஒரு அலர்ட்டாகவே பார்க்கப்படுகிறது. தனது அரசியல் எதிர்காலத்தையும், தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் நலனையும் கருத்தில் கொண்டு சரத்குமார் என்ன முடிவெடுக்க போகிறார் தெரியவில்லை.. அடுத்த கட்ட நகர்வு உதயசூரியனை நோக்கியா அல்லது தாமரைக்குள்ளேயே பொறுமையைக் கடைப்பிடிப்பதா? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications