அதிசயம் நிகழும்.. சுஜித் மீண்டு வந்து அம்மா, அப்பா என்றழைக்க வேண்டும்.. சரத்குமார் உருக்கமான பதிவு
Recommended Video
சென்னை: அதிசயங்கள் நிகழும். சுஜித் மீண்டு வந்து அப்பா, அம்மா என்றழைக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து 4ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
. #PrayforSujith #PrayForSurjeeth pic.twitter.com/NDQoNrNCiP
— R Sarath Kumar (@realsarathkumar) October 28, 2019
திரைப்பட நடிகர் தாமு இன்று காலை சம்பவ இடத்துக்கே சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து சரத்குமார் வீடியோ மூலம் ட்விட்டரில் கூறியிருக்கையில் ஆழ்துளை கிணற்றில் போராடி கொண்டிருக்கும் குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும். அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.
அவன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்வோம். மணிகள் கடந்தாலும் அவன் மீட்கப்பட்டு அவனது தாய், தந்தையரை பார்த்து அம்மா , அப்பா என்றழைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இதுவே அனைவரது பிரார்த்தனையாகும். அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications