அப்ப சரத்குமார் முதல்வராக முடியாதா? மாமியார் வேற ரொம்ப ஆசைபட்டாங்களே!
சென்னை: தமிழக முதல்வராக சரத்குமார் ஆக வேண்டும் என்ற அவருடைய மாமியாரின் (ராதிகாவின் தாய் கீதா) ஆசை நிராசையாகிவிட்டதே! ஏனென்றால் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டாரே!
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது. பாஜகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சமத்துவ மக்கள் கட்சி நடத்தியதாக வந்த தகவலை அடுத்து தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டுமோ சரத்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்படி திடீர் டிவிஸ்ட்டாக தனது கட்சி சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இதனால் சரத்குமாருக்கு பாஜகவில் ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என தெரிகிறது. அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவார் என்றும் தெரிகிறது.
அண்ணாமலை: இன்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த சரத்குமார் இத்தகைய முடிவை அறிவித்துள்ளார். இளைஞர்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளேன் என சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க விரும்பவில்லை, அவர் தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சரத்குமாரின் பழைய பேட்டிகள் சமூகவலைதளங்களில் விமர்சன பொருளாக மாறியுள்ளன.
2026 இல் தமிழக முதல்வர்: சரத்குமாருக்கு வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவருடைய இலக்கும் அதுவாகத்தான் இருந்தது. ஒருமுறை தனது கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026 ல் தெரிய வரும். தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். திமுகவுக்கு உழைத்தததற்கு என்னை கருணாநிதி ராஜ்யசபா எம்பியாக்கி அழகு பார்த்தார்.
கருவேப்பிலை: ஆனால் அதிமுகவுக்கு உழைத்த என்னை கருவேப்பில்லை போல் தூக்கி எறிந்துவிட்டார்கள் என சரத்குமார் விமர்சித்திருந்தார். பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்ததால் 150 ஆண்டுகள் வரை வாழும் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமலேயே இந்த தமிழக மக்கள் இருக்க போகிறார்கள். தமிழக மக்களை மட்டும் அல்லாமல் சரத்குமார் தனது மாமியாரையும் ஏமாற்றிவிட்டார்.
நெல்லை கூட்டத்தில்: அதாவது நெல்லையில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில் நீங்கள் எடுத்த காரியத்தை ஜெயிப்பீர்கள், இன்றுமே என் மனைவி சொன்னார். நீங்கள் நிச்சயமாக 2026ல் முதலமைச்சர் தான் என என் மனைவி சொன்னார்கள். சமீபத்தில், என் மாமியார் கீழே விழுந்து அடிபட்டு போனார்கள். அடிபட்டவரை காண நான் சென்றபோது, ஐயா நான் உங்களை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன் என முதல் கேள்வி கேட்கிறார். அவருக்கு 85 வயது ஆகிவிட்டது.
மற்றவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஆசை இருக்கும்போது ஏன் எனக்கு வரக்கூடாதா? எனக்கு அந்த ஆசை வந்தால் காமெடியாம். மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸாம். நான் சீரியஸாகத் தான் சொல்கிறேன். இவ்வாறு சரத்குமார் பேசியிருந்தார். இதன் மூலம் மாமியாரின் கனவையும் நிராசையாகிவிட்டார் சரத்குமார்.
2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை 2007ஆம் ஆண்டு சரத்குமார் தொடங்கினார். திமுக, அதிமுக தலைமைகளுடன் நெருக்கமாக இருந்த போதிலும் அவர் கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு தென்காசி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வென்றனர். அதன் பிறகு சரத்குமாருக்கு தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி இல்லை. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தென தமிழகத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவரது கட்சியையே கலைத்துவிட்டார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications