பாஜகவில் இணைகிறார் ஜீவஜோதி... அழைப்புவிடுத்த வானதி சீனிவாசன்
சென்னை: சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிக்கண்ட ஜீவஜோதி வரும் வாரத்தில் பாஜகவில் ஐக்கியமாக உள்ளார்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றுள்ளன.
ஜீவஜோதியை சந்தித்த வானதி, உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததை ஜீவஜோதியும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.

சரவணபவன்
சரவண பவன் ஹோட்டலில் 90 காலகட்டத்தில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்துகொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் மேற்கொண்டார்.

சிறைத்தண்டனை
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தாம் மேற்கொண்ட சட்டப்போராட்டங்களில் வெற்றிபெற்ற ஜீவஜோதி ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் தமிழக அளவில் பரிச்சயமான நபராக மாறினார் ஜீவஜோதி. இந்நிலையில் இப்போது மறுமணம் செய்துகொண்டு கணவர் மற்றும் தாயாருடன் தஞ்சையில் உணவகம் நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தை
ஜீவஜோதியை பாஜகவில் இணையுமாறு முத்துப்பேட்டையை சேர்ந்த கருப்பு முருகானந்தம் அழைத்துள்ளார். அவரும் அதனை தட்டாமல் யோசனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய ஜீவஜோதி பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார்.

அழைப்பு
ஜீவஜோதிக்கு ஆறுதல் கூறிய வானதி சீனிவாசன், உங்களை போன்ற போராட்டக் குணம் மிக்க பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆகையால், விரைவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா முன்னிலையிலோ அல்லது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையிலோ ஜீவஜோதி பாஜகவில் இணையவுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications