செம.. வருடம் முழுக்க டிவிட்டரை ஆண்ட விஜய்.. 2018ன் டாப் 10 டிரெண்டிங்கில் சுவாரசியம்!
2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் டிரெண்டான விஷயங்களை டிவிட்டர் வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: 2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் வெளியிட்டு இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் அந்த வருடம் வைரலான ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பை வருட இறுதியில் வெளியிடும். இதை வைத்தே அந்த வருடம் மக்கள் எதைப்பற்றி அதிகம் பேசி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள சிறந்த டிரெண்டிங் ஹேஷ்டேக்குகளின் பட்டியல் பல ஆச்சர்யத்தை தாங்கி இருக்கிறது. இந்த முறை தென்னிந்தியா தொடர்பான விஷயங்களே அதிகம் வைரலாகி உள்ளது.

முதல் இடம்
இந்த டிரெண்டில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்து விஜயின் சர்கார் படம் சாதனை படைத்து இருக்கிறது. இந்தியாவில் #Sarkar தான் 2018ல் வைரல் ஆன நம்பர் 1 ஹேஷ்டேக். அதேபோல் சர்கார் ஹேஷ்டேக்தான் அதிக விவாதத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது இடம்
இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயம்தான் உள்ளது. விசுவாசம் படத்தின் #Viswasam என்ற ஹேஷ்டேக்தான் இந்த வருடத்தில் இந்தியாவில் வைரலான இரண்டாவது பெரிய ஹேஷ்டேக். இந்த படம் இன்னும் வெளியாகாமலே இவ்வளவு பெரிய வைரலாகி உள்ளது.

அடுத்து என்ன
மூன்றாவது இடத்தில் தெலுங்கு படமான பாரத் அனே நேனு #BharatAneNenu படம் உள்ளது. நான்காவது இடத்தில் அரவிந்தசம்மீதாவும் #AravindhaSametha, ஐந்தாவது இடத்தில் ரங்கஸ்தலமும் #Rangasthalam, ஆறாவது இடத்தில் காலாவும் #Kaala உள்ளது. முக்கிய அரசியல் நிகழ்வுகள் பல நடந்தாலும் சினிமா ஹேஷ்டேக்குகளே அதிக டிரெண்ட் ஆகியுள்ளது.

சென்னை
அதற்கு அடுத்து தெலுங்கு பிக்பாஸ் #BiggBossTelugu2 டேக்கும், அதன்பின் சர்ச்சையை ஏற்படுத்திய MeToo ஹேஷ்டேக்கும், 9வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் போடு #WhistlePodu ஹேஷ்டேக்கும், 10வது இடத்தில் #IPL2018 டேக்கும் இடம்பிடித்துள்ளது. இது இல்லாமல் #KarnatakaElection, #Kerala Floods #Aadhaar ஆகியவையும் கணிசமாக டிரெண்ட் ஆகியுள்ளது.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications