காத்திருந்த எம்ஜிஆர்.. காதலை சொன்ன நடிகர்கள்! திரும்பிக் கூட பார்க்காத சரோஜா தேவி! அவரே சொன்ன காரணம்
சென்னை: அபிநயா சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அன்பை பெற்றவர். ஒரே நேரத்தில் 30 படங்கள், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நடிக்கும் அளவுக்கு பிசியாக இருந்தவர். எம்ஜிஆரே சரோஜாதேவியின் வருகைக்காக காத்திருந்தார் என்று கூட சொல்வார்கள். உச்ச நடிகர்கள் பலரும் அவரிடம் காதலை சொன்ன நிலையில், நடிகரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே கூறி இருக்கிறார்.
1950 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் சரோஜாதேவி. குறிப்பாக 1960 முதல் 75 வரையிலான சினிமா காலகட்டத்தில் அவர் நடிக்காத மொழிகள் இல்லை. அவர் நடிக்காத நடிகர்கள் இல்லை.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆர் உடன் முதல் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் உடன் மட்டும் 26 படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி.

காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என அப்போதைய முன்னணி நாயகர்கள் கூட நடித்தவர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார், ஹிந்தியில் திலீப் குமார் என அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்தவர். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெறும் 15 ஆண்டுகளில் நடித்தவர் தான் சரோஜாதேவி. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சூட்டிங்கில் இருப்பாராம்.
ஒரு படத்திற்கு மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எனக் கூட கால் சீட் கொடுத்ததாக கூறுகின்றனர். அப்போதைய திரை உலகினர். இப்போது எல்லாம் ஒரு படம் முடித்து விட்டு தான் நாயகிகள் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி என்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.
சில நேரங்களில் எம்ஜிஆரே சரோஜாதேவியின் வரவுக்காக படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்ததாக சொல்வார்கள். அன்பே வா, படகோட்டி உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றும் பலரது பலரது ஃபேவரிட் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா சூப்பர் ஸ்டார்கள், இமாலய இயக்குநர்களுடன் பணிபுரிந்தாலும் இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர். குறிப்பாக பல உச்ச நட்சத்திரங்கள் சரோஜாதேவியை காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கின்றனர். ஆனால் யாருடைய காதலையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சரோஜாதேவி 1967ல் பெங்களூரைச் சேர்ந்த பிரபல என்ஜினியரான ஸ்ரீ ஹர்சா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்தும் ஒதுங்கினார் விஜய் சிவாஜி இணைந்து நடித்த ஒன்ஸ்மோர் படத்திலும், சூர்யா நடிப்பில் ஆதவன் படத்திலும் கடைசியாக சரோஜாதேவி நடித்திருந்தார். இந்த நிலையில் எந்த நடிகரையும் காதலிக்காதது ஏன்? திரைத்துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என பழைய நேர்காணலில் ஒன்றில் சரோஜாதேவி பேசி இருக்கிறார்.
"நான் என் அம்மாவின் பேச்சைக் கேட்டு தான் நடந்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே கலைத்துறையில் இருந்து வரும் நபர்களை நான் திருமணம் செய்யக்கூடாது. உனக்கு பின்பும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என எங்க அம்மா சொன்னார். அதன் காரணமாகவே நான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களை காதலிக்கவில்லை. மேலும் சினிமா திருமணம் இறுதிவரை வராது என்பதும் எனது எண்ணம். அதனால்தான் திரைத்துறையை சேர்ந்தவர்களை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை" என கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications