நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா.. அந்த கொடநாடு கேஸ் என்னாச்சு? சசிகலா திடீர் ஆவேசம்
சென்னை: திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்காமல் இருக்கலாம்.. நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா என சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென ஆவேசப்பட்டார் சசிகலா.
லோக்சபா தேர்தலில் அதிமுக பெரும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவில் அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற குரல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் அதிமுகவில் தாம் என்ட்ரி ஆகிவிட்டதாகவும் அதிமுக ஒருங்கிணைக்கப்படும்; 2026-ல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றும் சசிகலா திட்டவட்டமாக கூறினார்.
அப்போது, திமுக அரசு மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சசிகலா முன்வைத்தார். மாணவர்களுக்கான சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது; போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை என சசிகலாவின் இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

இதன் பின்னர் திடீரென திமுக அரசின் இதனை எல்லாம் ஆதரவு டிவி, பத்திரிகைகள் கேட்கவில்லை என கூறினார் சசிகலா. அப்போது பத்திரிகையாளர்கள் பதில் தெரிவிக்க, திடீரென சாமியாடியவர் போல "எதிர்க்கட்சித் தலைவர் கேட்கலை.. நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா" ஆவேசப்பட்டார். மேலும் "இந்த பாருங்க.. நான் அரசாங்கத்தைக் கேட்கக் கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு.. எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை..

ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை செய்துகிட்டு இருக்கு? என்ன வேலை செய்துகிட்டு இருக்கு என ஊருக்கே தெரியுது.. உலகத்துக்கே தெரியுது.. உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்துல போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்களே..

அந்த கொடநாடு கேஸை முடிக்கக் கூட வக்கில்லையே உங்களுக்கு? கொடநாடு கேஸில் யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுங்க.. அதை ஏன் நீங்க செய்ய மாட்டேன் என்கிறீர்கள்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதற்கு திமுகதான் காரணம்.. கொடநாடு கேஸ் எப்போது முடிகிறதோ அப்போதுதான் ஊர் உலகத்துக்கு உண்மை தெரிய வரும். இதுதான் உண்மை. இவ்வாறு சசிகலா கூறினார்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications