அவங்க பிளானே வேற..! சசிகலா வைத்தியலிங்கம் மீட்டிங்கிற்கு இதுதான் காரணம்.. போட்டு உடைத்த காமராஜ்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், சசிகலா விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தொடரும் அதிமுக உட்கட்சி குழப்பம் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து மாறி மாறி சாடி வருகிறது.
மேலும், கட்சி தொடர்பாகவும் தலைமை அலுவலகம் தொடர்பாகவும் கூட இரு தரப்பும் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இது தான் அதிமுகவின் தற்போதைய நிலை.

அதிமுக
அதிமுக இரட்டை தலைமையின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதையடுத்து ஒற்றை தலைமை என்ற பேச்சு அங்கு எழுந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

எடப்பாடி
அதேநேரம் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்று வழக்கு தொடரப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும், அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், தற்போது அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாகவே உள்ளனர். இதனால் எடப்பாடி மகிழ்ச்சியில் உள்ளார்.

சசிகலா
இதற்கு இடையே சசிகலாவும் கட்சியைப் பலப்படுத்துவதாகக் கூறி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தச் சூழலில், சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சசிலா ஒரத்தநாடு வழியாக வந்து கொண்டு இருந்தார். அப்போது காவராப்பட்டு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் திரும்பிய சமயத்தில் இருவரும் நடுரோட்டில் சந்தித்துக் கொண்டனர்.

காமராஜ்
இந்தச் சந்திப்பு எதிர்பாராத விதமான சந்திப்பு தான் என்றும் இதில் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் வைத்தியலிங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சந்திப்பு திட்டமிட்ட ஒன்று தான் என்றும் அதிமுகவை அழிக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறி முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பரபரப்பைக் கிளப்பி உள்ளார். மின் உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் தான் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இதில் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது அதிமுகவின் கோரிக்கை மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாகப் பொதுமக்கள் கோரிக்கை இது தான்" என்றார்

ஒரே தலைமை
தொண்டர்கள் ஒன்றிணைந்து கட்சி அலுவலகம் செல்வதாக சசிகலா கூறியது குறித்து பதில் கூறிய அவர், "அதிமுகவின் ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான். அவர் கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது. ஒவ்வொருவரும் அவர்கள் ஆசைக்கு எதையாவது சொல்லி வருகிறார்கள், அதெல்லாம் நடக்கப் போவது இல்லை. எனவே, யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது.

எல்லாம் பிளான்
சசிகலாவும் வைத்தியலிங்கமும் சந்தித்துக் கொண்டது எதார்த்தமான சந்திப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அது திட்டமிட்டு நடந்த சந்திப்பு தான். அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் கட்சியை வளப்படுத்தவே நினைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கும் துணை போகிறார்கள். இது எல்லாம் அதிமுகவை அழிக்கும் வேலையாகத் தான் இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications