#HBDசின்னம்மா தனது ஆளுமையால் ஆட்சியை காப்பாற்றிய அற்புதமே சசிகலாவை வாழ்த்தும் ஆதரவாளர்கள்
சசிகலாவின் 63வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரில் #HBDசின்னம்மா என்று பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் 63வது பிறந்தநாள் இன்று அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒட்டியும் ட்விட்டரில் #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு ஆயிரக்கணக்கான ட்வீட்களை பதிவிட்டனர்.
Recommended Video
அம்மா போற்றி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்றைக்கு சின்னம்மா என்று சொல்லி போற்றி துதி பாட ஆரம்பித்து விட்டனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கினர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா, பின்னர் முதல்வராகவும் விரும்பினார். விதி அவரை விடவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவே, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாகவே தனது பிறந்த நாளில் மவுன விரதம் இருப்பாராம் சசிகலா. இந்த ஆண்டு அவரது விடுதலையை எதிர்பார்த்து அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அது எப்போது என்று தெரியாத நிலையில் சசிகலாவின் பிறந்தநாளை வழக்கம் போல போஸ்டர் ஒட்டியும், ட்விட்டரில் வாழ்த்து வசனங்களை பதிவிட்டும் வருகின்றனர்.

தமிழகத்தின் நைட்டிங்கேல்
தமிழகத்தின் நைட்டிங்கேல் அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே ஆளாக கட்டுப்படுத்திய அன்னையே என்று பதிவிட்டுள்ளார் ஒரு ஆதரவாளர்.

சின்னம்மாவிற்கு கடமை பட்டிருக்கோம்
எம்ஜிஆருக்கு பிறகான அதிமுக மூவருக்கு கடமை பட்டியிருந்தது அம்மாவிற்கு பிறகு இருவருக்கு கடமைப்பட்டிருக்கு என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

ராஜமாதா சின்னம்மா
ராஜமாதாவே என்று போற்றி போற்றி புகழ்ந்துள்ளார் ஒரு ஆதரவாளர். இதை விட ஒரு படி மேலே போய் உங்களுக்காக இந்திய அரசியலே காத்துக்கொண்டிருக்கிறது என்று புகழ்ந்துள்ளார்.

தமிழினமே காத்திருக்கிறது
#HBDசின்னம்மா ஒருவர் விடுதலைக்காக ஒட்டுமொத்த தமிழினமே காத்திருக்கிறது என்றால் அவர் தான் தமிழகத்தின் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் என்று பதிவிட்டுள்ளார் இன்னொருவர்.

சிங்கப்பெண் #சின்னம்மா
தியாகத்தலைவி இராஜமாதா சிங்கப்பெண் #சின்னம்மா அவர்கள் விடுதலையே தமிழக மக்களின் பொன்னான நாள் என்று போற்றியுள்ளார் இன்னொருவர். சசிகலா விடுதலை ஆகி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications