2026ல் ஜெயலலிதா ஆட்சி வரும்.. ஆனா எப்படின்னு மட்டும் கேட்காதீங்க.. செய்தியாளர்களை மிரள வைத்த சசிகலா!
சென்னை: “2026ல் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரும். ஆனால் எப்படின்னு மட்டும் கேட்காதீங்க.. ஜெயலலிதா ஆட்சி வந்ததும் அன்றைக்கு சாயங்கலாம் உங்களிடம் பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார் சசிகலா.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்கள் உடன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோருக்கு உணவும் பரிமாறினார்.

சசிகலா பேட்டி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் முதல் முறையாக ஏழை எளிய கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள புனிதமான திட்டத்தை உருவாக்கி கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் சென்று வர வழிவகை செய்தார். திமுக என்றாலே சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவையை நடத்துவதாக திமுக தெரிவித்தது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் 134 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடத்தப்பட்டுள்ளது.
பணி செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா செயல்படுத்தினார். சென்னை, திருச்சி, கடலூர், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் முதலில் கொண்டு வரப்பட்டது, பின்னர் 2014 ஆண்டு தமிழகம் முழுவதும் விரிவு படுத்தபட்டது. திமுக ஆட்சியில் அந்த திட்டத்தின் பெயரை மாற்றி 'தோழி’ என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
வாக்கு அரசியல் செய்யும் ஸ்டாலின்
விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெருமழையால், உடைமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள ஈரோட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு மழை நிவாரணம் வழங்கினார். அவருக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் நிவாரணம் வழங்கி இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட லேப்டாப், சைக்கிள் ஆகியவை கொடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு புத்தகம் கூட வழங்காமல் பழைய புத்தகத்தை வாங்கி படிக்கும் நிலையே தற்போது தமிழகத்தில் உள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டது இல்லை. திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கணக்கு செல்லாது
மேலும் பேசிய சசிகலா, “திமுகவின் கணக்கெல்லாம் தமிழக மக்களிடம் செல்லாது. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியாவிலேயே தமிழக மக்கள் மிகச்சிறந்த புத்திசாலிகள். இன்னொரு முறை தவறு நடக்காது. நல்லது நடக்கும். ஜெயலலிதா ஆட்சி அமையும். அது எப்படி என்று கேட்காதீர்கள், நிச்சயம் வரும். இந்த நம்பிக்கை எனக்கு உள்ளது ஜெயலலிதா ஆட்சி அமையும், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு தான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் அதனை நிச்சயம் செய்வேன்.
ஜெயலலிதா ஆட்சி அமையும் அன்றைக்கு மாலை பேசுகிறேன்
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும். அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதா என்பது மக்களை போய் பார்த்தால்தானே தெரியும். அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. ஜெயலலிதா ஆட்சி வந்ததும் அன்றைக்கு மாலை உங்களிடம் பேசுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications