சிதறிய உடல்கள்.. கிருஷ்ணகிரி வெடிவிபத்தில் 8 பேர் பலியானதற்கும் திமுக அரசே காரணம் - சசிகலா ஆவேசம்
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ள சசிகலா, திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வீடுகள் இடிந்ததுடன், 10 க்கு அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும், 10க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது. தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது.
திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கணடனத்திற்குரியது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கினால், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தூக்கத்தில் இருப்பதாலும்தான் எந்த பணிகளையும் சரியாக செய்ய முடியாமல் தமிழக மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.
எனவே திமுக அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications