நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்
விருதுநகர்: நீங்கள் உங்களை திருத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.. அதாவது பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு நாய் குட்டி வளர்ந்திருந்ததால் கூட, சின்ன பிஸ்கட் கொடுத்திருந்தால் கூட அது நன்றியுடன் இருக்கும்.. அது கூட இல்லாமல்.. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) செய்ததை அந்த பையன் (உதயநிதி ) கூறினார் என சசிகலா பிரச்சாரத்தில் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அதிமுக பாஜக தலைமையில் இன்னொரு அணியும், விஜய்யின் தவெக தனியாகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும், ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணியும் அமைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த தேர்தலில் தனிநபர் விமர்சனங்கள் அதிகமாக உள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே தனிநபர் விமர்சனங்கள் கடுமையாக உள்ளன. இதுபற்றி சசிகலா விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தலைவர் சசிகலா, தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சின்ன பையன், அந்த பையன் புதுசு.. பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் ஒரு படத்தை காண்பித்து , முதலமைச்சர் ஆவதற்கு யார் கீழே படுத்துகிடக்கிறது.. இவருதான் அவரு (எடப்பாடி பழனிசாமி).. என்று உதயநிதி கூறுகிறார்.. அதற்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் என்றால், நீ பால்டாயிலை குடிச்சிட்டு படுத்துக்கிடந்த என்று விமர்சிக்கிறார்.. இதெல்லாம் மக்களுக்கு தேவையா..
யாராவது பொறுப்புள்ளவங்க.. இந்த வயதில், இதனை பேசலாமா.. அப்ப உங்களுக்கு எப்படி ஆட்சி பண்ண வேண்டும் என்று தெரியவில்லை.. இரண்டு பேருக்குமே (உதயநிதி, எடப்பாடி) தெரியவில்லை.. இல்லை என்றால் இந்த பேச்சு எல்லாம் வராது.. அந்த சின்ன பையன் (உதயநிதி) சொன்ன என்ன.. அந்த பையன் காண்பித்தது என்னமோ உண்மை தான்... இது எல்லாம் டிவியில் எல்லாம் வந்த விஷயம் தானே.. டிவியில் வந்த விஷயத்தை தான் அந்த பையன் காட்டுகிறார்..
என்ன பண்ணியிருக்கணும் நீங்க.. இன்னைக்கு அந்த பையனை உயிரோடு இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கக்கூடாது நீங்கள்.. நீங்கள் உங்களை திருத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.. அதாவது பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு நாய் குட்டி வளர்ந்திருந்ததால் கூட, சின்ன பிஸ்கட் கொடுத்திருந்தால் கூட அது நன்றியுடன் இருக்கும்..
அது கூட இல்லாமல்.. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) செய்ததை அந்த பையன் (உதயநிதி ) கூறினார்.. அதனை கண்பிப்பதில் என்ன தவறு. . நடந்ததை தானே இந்த பையன் காட்டுகிறார்.. இதை சரி செய்திருக்க வேண்டும்... இப்போது நடந்து கொண்டிருப்பது தேர்தல் பிரச்சாரம். அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும். நாங்கள் வந்தால் இதனை செய்வோம்.. இப்படி செய்வோம் என்று சொல்ல வேண்டும். அப்படி பிரச்சாரம் செய்த தலைவர்கள் எல்லாம் இப்போது இல்லை.. " இவ்வாறு கூறினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications