3 தொகுதிகள்.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் சசிகலா.. பதற்றத்தில் அதிமுகவின் முக்கிய தலை!
சென்னை: சசிகலா சார்பாக நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் அதிமுகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கள நிலவரங்கள் தெரிய வந்துள்ளது. முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சசிகலா தரப்பு வேட்பாளர் ராம் குமார், திருமங்கலம் தொகுதியில் ஜீவிதா நாச்சியார் மற்றும் சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா ஆகியோர் அதிமுகவின் வாக்குகளை கைப்பற்றுவது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த முறை தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

ஆனால் திடீரென சசிகலா புதிய கட்சியை தொடங்கி வேட்பாளர்களை அறிவித்தார். சசிகலா தரப்பு வேட்பாளர்கள் வெற்றி பெறும் அளவிற்கு வலிமையானவர்கள் இல்லையென்றாலும், சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தடுக்கும் அளவிற்கு பலமுள்ளவர்களாக பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக 3 தொகுதிகளில் சசிகலாவுக்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதரவாக அலை வீசுகிறது.
முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை எதிர்த்து அதிமுக சார்பாக மலேசியா பாண்டி போட்டியிட்டார். இந்த தொகுதியில் ராஜ கண்ணப்பன் மீது கடுமையான அதிருப்தி இருந்து வந்த போதும், அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டி வெற்றிபெற வாய்ப்பில்லை. அதற்கு சசிகலா தரப்பு வேட்பாளர் டாக்டர் ராம் குமார் காரணமாக இருக்கிறார்.
முதுகுளத்தூர் தொகுதி மக்கள் நேரடியாக சாதிப் பாசத்தால் மட்டுமே ராம் குமாருக்கு போடுகிறோம்.. எடப்பாடி பழனிசாமியின் அதிமுக வெல்ல கூடாது என்று சொல்வதை பார்க்க முடிகிறது. இதனால் டாக்டர் ராம் குமார் குறைந்தது 10 ஆயிரம் வாக்குகளை அந்த தொகுதியில் பெறுவார் என்று தெரிகிறது. அதனால் அதிமுக தோல்வி அடையும் நிலை உருவாகி இருக்கிறது.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்பி உதயகுமாரை வீழ்த்த திமுக வேட்பாளர் சேடப்பட்டி மணிமாறன் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த தொகுதியில் சசிகலா தரப்பு வேட்பாளர் ஜீவிதா நாச்சியார் களமிறங்கியுள்ளார். அமமுக இளைஞரணி நிர்வாகியான இவர், அந்த தொகுதியில் மிகப்பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என்று தெரிகிறது.
அதேபோல் சாத்தூர் தொகுதியில் சசிகலா சார்பாக போட்டியிடும் இசக்கி ராஜா முக்குலத்தோர் சமூக அமைப்பு வைத்திருக்கிறார். இவர் முக்குலத்தோர் சமூக வாக்குகளை பிரிப்பதால், நயினார் நாகேந்திரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் சசிகலா தரப்பு வேட்பாளர்கள் பலரும் குறைந்தது ஆயிரம் வாக்குகளை வரை பிரிப்பார்கள் என்று தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்கள், அந்தந்த தொகுதிகளில் தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்திருக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் சசிகலாவால் அதிமுக சில தொகுதிகளை இழக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications