பிக் பிளான்! ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு பின் சசிகலா எடுக்கும் அஸ்திரம்! டெல்லியில் பிறந்த விடிவுகாலம்
டெல்லியில் சசிகலாவிற்கு எதிராக லாபி செய்யும் நபரின் பலம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு பின் பெரிய அரசியல் திட்டம் ஒன்றை நிறைவேற்ற சசிகலா முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இடைத்தேர்தல் என்பதால் இதில் எப்படியும் ஆளும் கட்சித்தான் வெற்றிபெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர்.

சின்னம் எடப்பாடி
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார். பொதுக்குழு நிர்வாகிகளின் கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் தென்னரசு இந்த தொகுதியில் வேட்பாளர் ஆகிவிட்டார்.

அண்ணாமலை ஆதரவு
இது போக எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று அண்ணாமலையும் கூறி உள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓ பன்னீர்செல்வம் நம்பிக்கை
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மொத்தமாக வெளியேறி உள்ளது. இரட்டை இலை சின்னம் இப்போதைக்கு தற்காலிகமாக எடப்பாடி தரப்பிடம் உள்ளது. ஓ பன்னீர்செல்வம் வேட்புமனுவில் தற்காலிகமாக கையெழுத்து போடும் உரிமையை இழந்து உள்ளார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து உள்ளது. பாஜகவும் எடப்பாடியுடன் நெருக்கம் காட்டி வருகிறது,. இருப்பினும் பொதுக்குழு வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக நம்புகிறதாம். இந்த வழக்கில் தீர்ப்பு எதிராக வந்தாலும் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் என்று ஓபிஎஸ் தரப்பு நம்புகிறதாம்

சசிகலா பிளான்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு பின் பெரிய அரசியல் திட்டம் ஒன்றை நிறைவேற்ற சசிகலா முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு எதிராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை . இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்கள் சப்போர்ட் இன்றி இருக்கிறார். அவருக்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை. அதிமுகவில் இப்படி இரண்டு முக்கிய தலைவர்களுக்கும் ஒரு விதத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால் எப்படியாவது இதை பயன்படுத்தி அதிமுக உள்ளே நுழைய வேண்டும் என்று சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் மாறும் காட்சி
அதேபோல் டெல்லியில் சசிகலாவிற்கு எதிராக லாபி செய்யும் நபரின் பலம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லி பாஜக அந்த நபரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா மீது டெல்லி தரப்பு அனுதாபம் கொள்ள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவிற்குள் நுழைவதற்கான பணிகளை செய்வார். எடப்பாடிக்கு எதிராக இவரை களமிறக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications