38 சம்பவம்..110 பேர் பலியாகியிருக்காங்க! திமுக ஆட்சினாலே இப்படித் தானே.. டேட்டாவோடு வந்த சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 38க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 110க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என சசிகலா விமர்சித்துள்ளார்.

விருதுநகர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிமருந்து கலவையின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3அறைகள் இடிந்து தரைமட்டமாகியதில் பணியிலிருந்த 4 நபர்கள் உயிரிழந்தனர்.

sasikala dmk mk stalin

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என சசிகலா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிமருந்து கலவையின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3அறைகள் இடிந்து தரைமட்டமாகியதில் பணியிலிருந்த 4 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 38க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 110க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட இடத்தில் கட்டிட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும்.

திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் காலங்களிலாவது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுத்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+