’வினை தீர்க்கும் ஆனைமுகன்’ சசிகலா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து! அதிலும் எடப்பாடிக்கு குடைச்சல் தான்!
சென்னை : முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவானது வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலைகள் விற்பனை, பூஜை பொருட்கள் விற்பனை என களைகட்டி வரும் நிலையில், தலைவர்கள் பலரும் பொது மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலாவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

சசிகலா அறிக்கை
அதில்,"வினை தீர்க்கும் ஆனைமுகன், முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அதை வெற்றியுடன் செய்து முடிக்க முதலில் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு ஆரம்பிக்கும்போது அந்த செயல் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சிலை
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று, அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ அரளி மலர் மாலைகள் அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

துரோக சிந்தனைகள்
சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல ஞானமுதல்வனை இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மனமுருக வணங்கி, சதுர்த்தி நாயகனின் அருளைப் பெற்று அனைவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமையட்டும்; சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், நாடெங்கும் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும்;

அதிமுக பொதுச்செயலாளர்
நோய் நொடியற்ற ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்வு எந்நாளும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்" என கூறியுள்ளார். அதில் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என குறிப்பிட்டுள்ளதோடு, அதிமுக பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications