அதிமுக சரியாக இல்லை.. கட்சியை வலுப்படுத்த நிறைய பண்ணனும்! இபிஎஸுக்கு சசிகலா பதிலடி
சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், கட்சி சரியாக இல்லை என்றும், அதை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது எனவும் சசிகலா கூறியுள்ளார்.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக முழு வேகத்தில் தயாராக வேண்டி இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்காதது பெரும் விமர்சனமாக பேசப்பட்டது. இந்த தேர்தலை விடுங்க.. அடுத்ததுல புடுச்சிடலாம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சமாதானம் சொல்லிக்கொண்டனர்.

ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த முறை, கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது என்று கட்சி தலைமை சமாதானம் சொல்லிக்கொண்டாலும், எடப்பாடி தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை என நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே ஏற்கெனவே கட்சியிலிருந்து பிரிந்த சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை உள்ளே கொண்டுவர வேண்டும் என்றும், இதன் மூலம் 2026 சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும் மாஜி அமைச்சர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த ஐடியாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்றைய பிரஸ் மீட்டில் இது குறித்து தெளிவாக பேசிய எடப்பாடி, கட்சியிலிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.. நீக்கப்பட்டவர்களே. அவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுகே இடமில்லை. அதிமுக பிளவுப்படவில்லை. இப்போது இருப்பதுதான் அதிமுக என்று கூறியிருந்தார். மட்டுமல்லாது நீக்கப்பட்டவர்களை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்திருக்கிறார்.
இப்படி முரண்டு பிடிப்பதன் மூலம் கட்சியின் வாக்குவங்கியை உயர்த முடியாது என்று, அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு உள்ள வாக்கு பலம்தான். டெல்டாவில் டிடிவிக்கு உள்ள செல்வாக்கும் சேர்ந்தால் அதிமுகவுக்கு பாசிட்டிவாக அமையும். ஆனால், இணைப்புக்கு இபிஎஸ்தான் பச்சை கொடி காட்ட வேண்டும்.
இப்படி இருக்கையில், அதிமுக சரியாக இல்லை என்று சசிகலா விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக சரியாக இல்லை. கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியதாக இருக்கிறது. வலுப்படுத்தி 2026ல் மக்களாட்சி அமையும்" என்று கூறியுள்ளார்.
கட்சியிலிருந்துக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடமில்லை என இபிஎஸ் கூறிய நிலையில், அதிமுக சரியில்லை என சசிகலா கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications