"குறி" வெச்சாச்சாமே.. ஸ்பெஷல் ரூமுக்குள் நுழைந்த சசிகலா.. காலை முதல் இரவு வரை.. அதென்ன 3 மாவட்டங்கள்
சசிகலா 3 தொகுகளை குறி வைத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கிற தொகுதிகளை எல்லாம் விட்டுவிட்டு, முக்கியமான இந்த 3 தொகுதிகளில் மட்டும், சசிகலா குறி வைத்துள்ளாராம்.. அவை என்னென்ன தொகுதிகள்? காரணம் என்னவா இருக்கும்?
Recommended Video
சசிகலா பிஸியாகி விட்டார்.. தொண்டர்களுடன் பேசுகிறார் என்றுதான் ஆரம்பத்தில் சொன்னார்கள்.. ஆனால், அதிமுக, அமமுக நிர்வாகிகளிடம் பேசி கொண்டிருக்கிறார் சசிகலா.. ஒவ்வொரு ஆடியோவும் வெளியாக வெளியாக, அதிமுகவுக்கு கலங்கி கொண்டிருக்கிறது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.. இதுதான் அதிமுகவுக்கு ஏற்பட்ட பயத்தின் முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

தீர்மானம்
ஆனால் அதேசமயம், தூத்துக்குடி அதிமுகவில் வேறு விதமாக நிலைமை திரும்பி உள்ளது.. அதிமுக பொதுச் செயலராக சசிகலா தொடர வேண்டும் என்று கூட்டம் போட்டு தீர்மானமே இயற்றிவிட்டனர்.. இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சறுக்கல்தான்... காரணம், இப்படி தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

ரூட்
தேர்தல் சமயத்தில், எடப்பாடி பழனிசாமி எது சொன்னாலும் அதற்கு ஓகே சொன்னவர்கள்தான், இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள்.. இப்போது அதிமுக தோல்வி என்றதும், வேறு ரூட்டை பிடிக்க தொடங்கி உள்ளதாக ஒருசாரார் சொல்கிறார்கள்... இதை எடப்பாடி பழனிசாமி எப்படி எடுத்து கொள்கிறாரோ தெரியவில்லை, ஆனால் சசிகலாவுக்கு புது தெம்பை தந்துள்ளதாம்.

தொண்டர்கள்
போன் மேல போன் போட்டு பேசி வருவது வீண் போகவில்லை என்றும் நம்பிக்கை பிறந்துள்ளதாம்.. மேலும் உற்சாகத்தையும் நிறைய அள்ளி தந்துள்ளதாம்.. இப்போது விஷயம் என்னவென்றால், அடுத்த கட்ட லெவலுக்கு முன்னேறி வருகிறார் சசிகலா.. அதன்படி, தொண்டர்களிடம் இருந்துவரும் கடிதங்களைப் படிக்கவும், அவர்களுடன் செல்போனில் பேசுவதற்காகவும் ஸ்பெஷலாக ஒரு ரூமை ஒதுக்கி உள்ளாராம்.. காலை முதல் நைட் வரை அந்த ரூம்தான் ஆபீஸ் போல பம்பரமாக இயங்குகிறது...

சீக்ரெட்
காலைல டிபன் சாப்பிட்டவுடன் அந்த ரூமுக்குள் சென்றுவிடுகிறாராம் சசிகலா.. உள்ளே நுழைந்துவிட்டால் அவ்வளவுதான்.. தொண்டர்களுக்கு போன் போடுவது, அவர்களின் லெட்டர்களை படிப்பது, அதற்கு பதில் சொல்வது என பிஸியாகிவிடுகிறாராம். இதில் இன்னொரு சீக்ரெட்டும் கசிந்துள்ளது.. ஓபிஎஸ் தொகுதியான தேனி மற்றும் போடி தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் தான் சசிகலா அதிகம் பேசுகிறாராம்.

3 தொகுதிகள்
அதேபோல, எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம்... ஏற்கனவே கலங்கி போயுள்ள அதிமுக தலைமை, இந்த விஷயம் கேள்விப்பட்டு இன்னும் கிறுகிறுத்து போயுள்ளதாம்.. இந்த 3 தொகுதிகளில் மட்டும் சசிகலா குறி வைக்க என்ன காரணம்? என்னவாக இருக்கும்? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications