அப்பல்லோவை தெறிக்க விட்டு.. பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்த சசிகலா
சென்னை: அப்பல்லோவில் மட்டுமல்ல பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையை சசிகலா தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா இருவரையும் பிரித்து பார்க்க முடியாது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது என்னதான் கட்சி ரீதியில் முக்கிய முடிவுகளை அவர் அறிவித்திருந்தாலும் அதன் பின்புலத்தில் சசிகலா இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
சசிகலா எப்போதும் போயஸ் தோட்டத்திலேயே இருந்துள்ளார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டத்தில் இருந்திருந்தாலும் ஜெயலலிதாவுடன் நட்பு கிடைத்தவுடன் சசிகலாவின் ரேஞ்சே மாறிவிட்டது.

அறையில்
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் ஜெயலலிதா அனுபவித்த அனைத்து சொகுசு வசதிகளையும் அவரும் அனுபவித்தார். அந்த வகையில்தான் ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்த்த போதும் அவர் சொகுசு அறையிலேயே தங்கியிருந்திருக்கிறார்.

சிகிச்சை பெற்ற அறை
இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. அதில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் மொத்த மருத்துவ செலவு ரூ. 7 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெற்ற அறையின் வாடகை 75 நாட்களுக்கு ரூ. 24 லட்சம்தான்.

வாடகை
ஆனால் சசிகலா குடும்பத்தினர் தங்கிய அறைக்கான வாடகை மட்டும் 1.24 கோடியாகும். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. நோயாளியை காட்டிலும் அவரை பார்த்து கொள்ள வந்தவர்களின் செலவு அதிகமாகியுள்ளது. ஜெயலலிதா தங்கியிருந்த அறை வாடகையை விட இது பல மடங்கு அதிகம் ஆகும்.

சொகுசு வாழ்க்கை
இது போல் தொடர்ந்து சொகுசாக இருந்த சசிகலாவால் திடீரென பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரால் கொசுக் கடியிலும் பஞ்சு மெத்தை இல்லாமலும் இருக்க முடியவில்லை. இதனால் சிறைக்கு சென்றும் திருந்தாமல் அங்கும் சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை இறைத்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

சிறை விவகாரம்
சசிகலாவுக்கென ஓர் அறை அல்ல, மொத்தம் 5 அறைகளை பெற்றிருந்தார். அதோடு தனி சமையல் செய்ய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் வைத்திருந்தார். இதை கர்நாடக மாநில போலீஸ் அதிகாரி ரூபா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அப்பல்லோ பில்லை பார்த்ததிலிருந்து ஏனோ இந்த சிறை விவகாரத்தை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications