"50/50".. சாதியும்.. சசிகலாவும்.. "மாறும் கோலம்".. ஓபிஎஸ்ஸின் அஸ்திரம் வெல்லுமா... தடதடக்கும் தெற்கு
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம்" என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சொல்லி உள்ள கருத்து, தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி வருகிறது.. குறிப்பாக தென்மாவட்ட அதிமுகவை அதிர வைத்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ பகீர் திருப்பங்கள் உண்டாகின.. அந்த திருப்பங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஓபிஎஸ் என்பதை மறுக்க முடியாது. சசிகலாவை நேரடியாக குற்றம் சொன்னவர்.. சமாதியில் அவருக்கு எதிரான புகார்களை புட்டு புட்டு வைத்தவர்..
அம்மா மரணத்துக்கு நீதி விசாரணை தேவை என்று சொல்லி, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்.
சமீபத்தில், ஜெயிலில் இருந்து வந்தபிறகு, நிச்சயம் சசிகலாவிடம் தாவக்கூடியவர் என்று முதலில் அடிபட்ட பெயர் ஓபிஎஸ்தான்.. ஆனால், பல அதிருப்திகள், உட்கட்சி பூசல் இருந்தாலும் கடைசிவரை எடப்பாடியார் பக்கமே சாய்ந்துள்ளார்.

சசிகலா
இப்படிப்பட்ட சூழலில், தந்தி டிவியில் ஓபிஎஸ் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்கப்படுகிறது.. அதற்கு, "என்னைப் பொறுத்தவரை சசிகலா 4 வருஷம் தண்டனையை அனுபவித்திருக்கிறார்... மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது அம்மாவுடன் 32 ஆண்டு காலம் பயணித்தவர் என்ற அடிப்படையில் அம்மாவுக்கு பல உதவிகள் நன்மைகள் செய்தவர் என்ற அடிப்படையில் அவர் அதிமுகவுக்கு வந்தால் அதை பரிசீலிக்கலாம்.

வாக்கு அரசியல்
இப்போது கட்சி ஜனநாயக முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்டவருக்காகவோ, ஒரு குடும்பத்துக்காகவோ கட்சி இப்போது இயங்கவில்லை... ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஜனநாயக ரீதியாக இயங்கும் கட்சியின் இந்த செட்டப்பை, இந்த அமைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை இணைத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம்" என்று கூறியுள்ளார்.

அதிருப்தி
ஓபிஎஸ்ஸின் இந்த கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இதற்கு காரணம், கடந்த சில நாட்களாவே ஓபிஎஸ் மீது தென்மாவட்ட மக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.. இதற்கு காரணம் வன்னியர் இடஒதுக்கீட்டு விஷயத்தில் ஏன் ஓபிஎஸ் ஏற்று கொண்டார்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.. இரண்டாவது காரணம், தென் மாவட்டத்தில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் உள்ளது.. தினகரன் தனியாக அங்கு செல்வாக்கு பெற்றிருப்பதால், அதிமுகவுக்கு செல்லக்கூடிய ஓட்டு வங்கிகள் மொத்தமும் அமமுகவுக்கு பிரிந்து செல்லும் நிலை உள்ளது.

தினகரன்
இந்த தர்மசங்கடத்தை ஓபிஎஸ் தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. போதாக்குறைக்கு தேமுதிகவையும் அமமுக இழுத்து கொண்டு போய்விட்டதால், முக்குலத்தோர் வாக்கு மட்டுமல்லாமல், நாயுடு ஓட்டுக்களையும் தினகரன் சேர்த்து பெறுவார் என்ற கள தகவலும் கிடைத்து வருகிறது. அதனால்தான், இந்த முறை 50/50 என்ற ரீதியில் ஓபிஎஸ் ஒரு பக்கம், இபிஎஸ் மறுபக்கம் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர்.. தனக்குரிய 50 சதவீத ஆதரவாளர்களில் ஓபிஎஸ், பெரும்பாலும் தன் சமுதாயம் சார்ந்தவரையே வேட்பாளராக தென்மண்டலங்களில் நிறுத்தி உள்ளார்..

தென்மண்டலம்
அவ்வளவு ஏன்? கூட்டணியில் இணைத்துள்ளவர்களும் இதேபோல தென் மண்டலங்களை சேர்ந்தவர்களே இடம் பெற்றுள்ளனர்.. முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக ஓபிஎஸ் இவ்வாறு காய் நகர்த்தினாலும், இதுவே அதிமுகவுக்கு மைனஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது... சொந்த சமுதாய மக்களின் அதிருப்தியை சம்பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே, கார்த்திக் போன்ற நடிகர்களையும் ஓபிஎஸ் அரவணைக்க தயாராகவும் இருந்துள்ளார் என்பதும் நமக்கு புலப்படுகிறது..

தென்மண்டலம்
அவ்வளவு ஏன்? கூட்டணியில் இணைத்துள்ளவர்களும் இதேபோல தென் மண்டலங்களை சேர்ந்தவர்களே இடம் பெற்றுள்ளனர்.. முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக ஓபிஎஸ் இவ்வாறு காய் நகர்த்தினாலும், இதுவே அதிமுகவுக்கு மைனஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது... சொந்த சமுதாய மக்களின் அதிருப்தியை சம்பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே, கார்த்திக் போன்ற நடிகர்களையும் ஓபிஎஸ் அரவணைக்க தயாராகவும் இருந்துள்ளார் என்பதும் நமக்கு புலப்படுகிறது..

காழ்ப்புணர்ச்சி
இறுதியில், சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து கூறியதன் அர்த்தம், நிச்சயம் வாக்கு அரசியலாகவும் பார்க்கப்படுகிறது.. ஓபிஎஸ்-ன் இந்த பேச்சு உண்மையிலேயே எதை உணர்த்துகிறது? இதனால் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக பக்கம் திரும்புமா? சசிகலா மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை என்று சொல்வது, சாதீய உணர்வா? அல்லது அரசியல் பெருந்தன்மையா? தெரியவில்லை.. பார்ப்போம்..!


Click it and Unblock the Notifications
