இரண்டாக உடையும் அதிமுக? 30 எம்எல்ஏக்களை தூக்க "டாஸ்க்".. யாகத்திற்கு இடையே சசிகலா வளர்க்கும் தீ!
சென்னை: அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று கட்சிக்குள் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில்.. சசிகலாவோ திருச்செந்தூரில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யாகத்தில் தீ வளர்ப்பதை போலவே அதிமுகவிலும் இவர் முக்கியமான தீ ஒன்றை வளர்த்து கொண்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில்தான் தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து அதிமுகவில் சசிகலாவை மீண்டும் கொண்டு வருவதற்கான குரல்கள் தீவிரம் எடுத்துள்ளன.
அதிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து, அவருக்கு ஆதரவாக பேசினார். இவரின் இந்த தீர் மூவ் காரணமாக ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவரும் ஓ ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

யாகம்
இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலா திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அங்கு அவர் தனிப்பட்ட வகையில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். எடப்பாடி உள்ளிட்ட தனது எதிரிகளை வீழ்த்தும் யாகம் அது என்று சசிகலா தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்த பூஜைக்கு இடையேதான் அதிமுகவில் அதிரடி வேலைகளை சசிகலா தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. யாகத்தில் தீ வளர்ப்பதை போலவே அதிமுகவிலும் இவர் முக்கியமான தீ ஒன்றை வளர்த்து கொண்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ வளர்க்கிறார்
அதன்படி அதிமுகவில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர சசிகலா பிளான் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 30 எம்எல்ஏக்கள் வரை சசிகலா பக்கம் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அதிமுக கூட்டங்களில் தங்களின் கோரிக்கைகளை எடப்பாடி ஏற்காததால் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் என்று பலரை குறி வைத்து சசிகலா தூக்க போவதாக கூறப்படுகிறது.

30 எம்எல்ஏக்கள்
முக்கியமாக டெல்டா, தென் மாவட்ட எம்எல்ஏக்கள் பலர்தான் அதிருப்தியில் இருக்கிறார். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள், சிறுபான்மையினர் என்று பலர் எடப்பாடி மீதி அதிருப்தியில் இருக்கிறார்கள். அதோடு கொங்கு மாவட்டத்திலேயே சில எம்எல்ஏக்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவின் எழுச்சிக்கு எடப்பாடிதான் காரணம் என்று கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம்தான் சசிகலா தரப்பு பேசி வருகிறதாம்.

அவங்களே வராங்களாம்!
இதெல்லாம் போக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, பல்வேறு வழக்குகளில் கைது என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, ராஜேந்திர பாலாஜி என்று பலர் கைதாகி வெளியே வந்துள்ளனர். இப்படி ஆளும் தரப்பின் நடவடிக்கைகளை பார்த்தும் சில நிர்வாகிகள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆளும் தரப்பின் ஆக்சன்களை எடப்பாடி தடுக்கவில்லை, நல்ல வலுவான தலைமை தேவை என்று கூறி வருகிறார்களாம்.

ஓபிஎஸ் முழு ஆதரவு
இவர்களின் ஆதரவைத்தான் சசிகலா பெறுவதற்கு திட்டமிட்டு உள்ளனராம். தனக்கு நெருக்கமான வட்டாரத்தை வைத்து சசிகலா இந்த தீயை முட்டிக்கொண்டு இருக்கிறாராம். இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஓ ராஜாவை ஓபிஎஸ் நீக்கியது எல்லாம் கண்ணாமூச்சிதான். சசிகலாவை கொண்டு வருவதுதான் ஓபிஎஸ்ஸின் "அல்ட்டிமேட் எய்ம்" என்கிறார்கள். நடக்க கூடிய விஷயங்கள் எல்லாம் அதிமுகவை இரண்டாக உடைக்கும் என்றும் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.
Recommended Video

எமோஷனல் அட்டாக்
ஒற்றை தலைமைதான் தேவை.. அப்போதுதான் உங்கள் பாதுகாப்பை ,.. கட்சியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று எமோஷனலாக அட்டாக் செய்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க சசிகலா முயன்று கொண்டு இருக்கிறாராம். அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அதிமுக எடப்பாடி அணி - சசிகலா அணி என்று இரண்டாக உடையும் வாய்ப்புகள் கூட உள்ளன. அதற்கு முன்பாக இதில் நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications