அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு!
சென்னை: ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலா தற்போது கிட்டத்தட்ட அரசியல் வாழ்க்கையின் இறுதி பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணி அமைய மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர் தற்போது கூட்டணிக்காக தைலாபுரத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். அஇபுதமமுகவில் இணைந்திருக்கும் அவர் தற்போது ஆவடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி என்பது தான் தற்போது அரசியல் களத்தில் தீவிரமாக பேசப்படும் பொருளாக இருக்கிறது. கூட்டணி வாய்ப்பு தேடி தைலாபுரத்து கதவுகளை தட்டிய அரசியல் கட்சிகள் தற்போது தைலாபுரமே கதவைத் தட்டியும் திறக்க மறுத்துவிட்டன.
ஜெயலலிதாவின் நிழலாக இருந்து கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய முடிவுகளை எடுத்த சசிகலா, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறார். நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் கூட தனித்துப் போட்டியிடுவேன் என அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

சசிகலா அரசியல் எதிர்காலம்
வெற்றி கிடைக்கிறதோ? இல்லையோ? தனித்து தான் போட்டியிடுவேன் என சீமானும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியை பலப்படுத்தி தொகுதி பங்கிட்டு மேற்கொண்டு வருகிறது. பல விமர்சனங்கள் இருந்தாலும் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியின் பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஆனால் அதிமுகவின் ராஜமாதாவாக தன்னை அறிவித்துக் கொண்ட சசிகலா அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தைலாபுரத்து கதவுகளை தட்டி வருகிறார்.
ராமதாஸ் சசிகலா பேச்சு
மகனால் ஓரங்கட்டப்பட்ட ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி சேரலாம் என சொல்லப்படுகிறது. அரசியல் முட்டு செந்தில் நிற்கும் இருவரும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சசிகலா அதன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதற்கிடையே கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என சசிகலா அறிவித்த நிலையில் வெறும் 50 மனுக்களே வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆவடி தொகுதி
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் 50 மனுக்கள் தான் வந்திருப்பது சசிகலாவை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதில் பாதி சசிகலா போட்டியிட வேண்டும் என வந்திருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இந்த நிலையில் ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர். ஆவடி தொகுதிக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என சொல்லும் அரசியல் பார்வையாளர்கள், சசிகலாவின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பதுதான்.
சின்னம்மா திட்டம்
அதிமுக, அமுமுக, பாமக வேட்பாளர்கள் போட்டியில் போட்டியிடும் தொகுதிகளில் சசிகலா ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை நிற்க வைத்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இது மறைமுகமாக திமுகவுக்கு உதவும் செயலாக பார்க்கப்பட்டாலும், ஒரு காலத்தில் தன்னை பார்த்து கும்பிடு போட்டவர்கள் என்று கண்டு கொள்ளாமல் செல்வதால் ஆத்திரத்தில் இருக்கும் அவர் பாஜகவின் பேச்சைக் கேட்டு தன்னை வரம் கட்டி விட்டார்களே என கொந்தளிப்பில் இருப்பதோடு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருப்பதாக சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல்
ஏற்கனவே இரு துருவ அரசியல் ஈடுபட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். தேமுதிக, ஓபிஎஸ் திமுகவுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் சசிகலாவும் ராமதாஸ் ஒன்றாக சேர்ந்து போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அது 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தான் தற்போதைய கேள்வி.












Click it and Unblock the Notifications