சித்தியை பார்த்ததும் தெரித்து ஓடிய தினகரன்! சபதத்தை முடித்த சசிகலா! திரைமறைவில் திக் திக் பாலிடிக்ஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசியல் களம் தகித்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. ஏதோ பெரிய திட்டத்துடன் தன்னுடைய அரசியலை மீண்டும் செயல்படுத்த வருவதுபோலவே உள்ளது.. சசிகலாவின் திட்டத்தில் விஜய், டிடிவி தினகரன் ரோல் என்ன?
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பிறகு அதிமுகவை மீட்டெடுக்க போவதாக சொல்லி வந்த சசிகலாவுக்கு, எடப்பாடி பழனிசாமியின் விடாப்பிடியான எதிர்ப்பு முட்டுக்கட்டையாக அமைந்தது.

சசிகலாவின் புதிய கட்சி
தென் மாவட்ட சுற்றுப்பயணம் உள்ளிட்ட அவரது முயற்சிகள் பெரிய அளவில் எடுபடாத நிலையில், தற்போது அவர் எடுத்துள்ள "தனி ரூட்" முடிவு அதிமுக வட்டாரங்களை உன்னிப்பாக கவனிக்க வைத்து உள்ளது.
இப்போதுள்ள அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்து இருப்பது சசிகலாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளதாகவே தெரிகிறது.. தினகரனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றும், தென் மாவட்டங்களின் பலம் தனக்கே உள்ளது என்றும் கருதும் சசிகலா, இதனை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக பார்க்கிறாராம்.
அம்மா அதிமுக
குறிப்பாக, அமமுகவின் கூட்டணி முடிவால் அதிருப்தியில் இருக்கும் தென் மாவட்ட சமூகத்தினரை தன் பக்கம் இழுப்பதன் மூலம், அதிமுக மற்றும் அமமுகவின் வாக்கு வங்கியை சரிக்கும் வியூகத்தை சசிகலா வகுத்து உள்ளார்... இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 24ம் தேதி அதாவது ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சென்னை நினைவிடத்தில் வைத்து "அம்மா அதிமுக" என்ற புதிய கட்சியை அவர் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தனிப்பயணத்தின் இன்னொரு சுவாரசியமான அம்சம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் சசிகலா கூட்டணி அமைக்க விரும்புவது தான்.
திரைமறைவில் இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடப்பதாகவும், இதில் அதிமுகவில் இருந்து விலகிய அல்லது தவெக-வில் தொடர்பில் உள்ள சில முக்கிய புள்ளிகள் தூதுவர்களாக செயல்படுவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன...
சித்தி வருகை - டிடிவி தினகரன் - அமமுக
தொடக்கத்தில் சசிகலாவை தன் கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டிய போதிலும், தென் மாவட்ட வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டு அவர் சம்மதிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே விஜய் கட்சிக்கு டிடிவி தினகரன் செல்ல இருப்பதாக செய்திகள் பரபரத்த நிலையில், சசிகலா தவெகவுக்குள் நுழைய உள்ளதாக தெரிகிறது... இந்த ட்விஸ்ட்டை தினகரனே எதிர்பார்க்கவில்லையாம்..
நேற்றுமுன்தினம் சென்னையில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காரில் சசிகலா வந்தார்.. உடனே டிடிவி தினகரரனுக்கு அதுகுறித்த தகவலை ஆதரவாளர்கள் சொல்லவும், உடனடியாக பேட்டியை முடித்துகொண்ட தினகரன் , வேனில் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிசென்றார். அதாவது எதிர் எதிர்பார்த்து கொள்ளாமல், பரஸ்பர வணக்கமும் வைக்காமல் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இருப்பதை கண்டு, இரு தரப்பு ஆதரவாளர்களும் செய்வதறியாது குழம்பி நின்றார்களாம்.. இதுவும் பேசுபொருள் ஆகி உள்ளது.
தவெக விஜய்
எனவே, சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு, அதிமுக மற்றும் அமமுகவின் ஓட்டுக்களை பிரிக்கும் செக் ஆக அமையும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
அனைத்து தேர்தல் செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து உள்ள சசிகலா, தினகரனை அரசியலில் முடக்கிவிட்டு, தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக காட்ட துடிப்பதாக தெரிகிறது. இதுவரை அமைதி காத்து வந்த சசிகலாவின் இந்த அதிரடி பாய்ச்சல், விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்கும் பட்சத்தில், தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக மாறி எதிர்பாராத திருப்புமுனைகளை தருமா???? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications