பார்த்தீங்களா.. இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. ரிசார்ட் "கேட்டை" தொட்டு வணங்கி.. அலற விடும் "பக்தாஸ்"
சசிகலாவை வரவேற்க ரிசார்ட் முன்பு ஆதரவாளர்கள் கூடி வருகிறார்கள்
சென்னை: இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க போல.. சசிகலா இப்போது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார் இல்லையா.. அந்த ரிசார்ட்டின் வாசலில் ஒரு இரும்பு கேட் இருக்கும் இல்லையா.. அந்த கேட்டை தொட்டு கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்..!
பாகுபலியின் ராஜமாதா சிவகாமியை தேவியை வரவேற்பது போல, அப்படி ஒரு வரவேற்பை சசிகலாவுக்கு தரும் முயற்சியில் அமமுக இறங்கி வருகிறது..
சசிகலாவை வரவேற்க 50 எம்எல்ஏக்களும் 6 அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. இதைதவிர, அதிமுகவின் நிர்வாகிகள் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிக் கொண்டும், அவர்களை கட்சியை விட்டு நீக்கும் படலமும் நடந்து கொண்டிருக்கிறது.

சசிகலா
ஆனால், அதெல்லாம் தமிழ்நாட்டில்தான்.. கர்நாடகாவில் வேற லெவலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் எப்போதோ இறங்கிவிட்டனர்.. விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சசிகலா தங்கி இருக்கிறார்.. 7 நாள் அவரை டாக்டர்கள் ரெஸ்ட் எடுக்கவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் சொன்னதால், அங்கு ஓய்வில் இருக்கிறார்.. அதனால் அவர் யாரையுமே இதுவரை சந்திக்கவில்லை.

முழக்கம்
இதெல்லாம் தெரிந்தும்கூட, அவரை பார்ப்பதற்காக அவரது ஆதரவாளர்களும் அந்த ரிசார்ட் முன்னாடி கூடி வருகின்றனர்.. இப்படித்தான் விக்டோரியா ஆஸ்பத்திரி முன்பும் திரண்டு முழக்கமிட்டனர்.. இப்போது அங்கிருந்து ஷிப்ட் ஆகி ரிசார்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.. நேற்றுகூட, பெங்களூருவை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அந்த சொகுசு விடுதியின் முன்பு கூடினர்.. முழக்கமிட்டனர்.. சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.. ஆனால், அவர்களுக்கு சசிகலாவை காண அனுமதி மறுக்கப்பட்டது.

கட்டுப்பாடு
இதுமாதிரி தொண்டர்கள் கூடாது என்றும், யாரும் சசிகலாவை வரவேற்க கூட்டம் கூட கூடாது என்றும் ஏற்கனவே போலீஸ் கட்டுப்பாடு இருக்கின்றன.. ஆனால், மொத்தமும் எப்போதோ காற்றில் பறந்துவிட்டது.. இப்போது இன்றும், சசிகலா தங்கியுள்ள அந்த ரிசார்ட் முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த கூட்டத்தில் ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. நெருக்கி நெருக்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.

பேனர்கள்
பேனர்களை இப்போதே அங்கு வைத்துவிட்டனர்..இதை பற்றி கேட்டால், இங்கிருந்தே சசிகலாவை வரவேற்க தயாராகி விட்டோம் என்று பூரிப்புடன் சொல்கிறார்கள். அந்த சொகுசு விடுதியின் வாயிலை தொட்டு வணங்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.. இப்படி ஒரு வினோதம் அங்கு நடந்து அரங்கேறி வருகிறது.. ஆதரவாளர்கள் இப்படி செய்வதை, அந்த ரிசார்ட்டில் பாதுகாப்பில் இருப்பவர்கள் வினோதமாகவும் அதிசயமாகவும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஒரு மாநிலத்தில், இப்படிப்பட்ட ஆச்சரியங்களை எல்லாம் நம்ம ஆளுங்கதான் நடத்தி காட்டுவார்கள்!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications