ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கினால் ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றுவிட்டு தொண்டர்களை சந்திக்க சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா கடந்த சில மாதங்களாக ஆடியோக்களில் அதிமுக, அமமுக தொண்டர்களிடம் பேசி வருகிறார். அவர் பேசும் போது தொண்டர்கள், சசிகலாவை அரசியலுக்கு வருமாறு கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.
சசிகலாவும் விரைவில் தொண்டர்களை சந்திப்பதாக சொல்லி வருகிறார். இதன் மூலம் தனக்கு இருக்கும் ஆதரவை ஆழம் பார்க்கும் முயற்சியாகவே இது இருக்கும் என தெரிகிறது.

தொண்டர்கள்
அண்மைக்காலமாக சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ வெளியாகி அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அவர் தொண்டர்களை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருகிறார்.

விலக்கினால்
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டால் சசிகலா நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையிலிருந்து ரிலீஸாகி வந்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடம் செல்ல சசிகலா நினைத்திருந்தார்.

பராமரிப்பு பணிகள்
ஆனால் அப்போதைய அதிமுக அரசோ பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி ஜெயலலிதா நினைவிடத்திற்கு பார்வையாளர்கள் அனுமதியில்லை என அறிவித்திருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொது இடமான, மக்கள் புழங்கும் இடமான ஜெயலலிதா நினைவிடத்திற்கும எம்ஜிஆர் நினைவிடத்திற்கும் சசிகலா செல்வார் என்றே தெரிகிறது.
Recommended Video

நடைப்பயிற்சி
தற்போது கடற்கரைகளில் நடைப்பயிற்சி செய்ய மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா வருகையை திமுக அரசு அனுமதிக்குமா என தெரியவில்லை. இதன் பிறகு தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.

காய் நகர்த்தும் சசிகலா
இன்று கூட திருப்பூரில் ஒரு தொண்டருடன் பேசும் போது சுற்றுப்பயணத்தின் போது வந்து சந்திக்கிறேன் என சசிகலா கூறியிருந்தார். எனவே உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு சசிகலா காய் நகர்த்த தயாராகிவிட்டார் என்றே கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications