Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சென்டிமென்ட்! எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில்.. ஓராண்டு கழித்து போயஸ் தோட்டம் சென்ற சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெய கணபதியை சசிகலாவும் அவரது அண்ணன் மனைவி இளவரசியும் வழிபாடு நடத்தினர்.

Recommended Video

    OPS முதலில் வந்துவிட்டார்... போக போக எல்லாமே சரியாகிவிடும் - Sasikala *Politics

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடவுள் பக்தை. அவருக்கு விநாயகர் என்றால் மிகவும் பிடிக்கும். அது போல் அவ்வப்போது ஸ்ரீரங்கநாதரையும் வெங்கடாஜலபதியையும் தரிசிப்பது அவருடைய வழக்கம்.

    ஜெயலலிதா மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி மன கஷ்டத்தில் இருந்தாலும் சரி அவர் விநாயகரை தரிசித்துவிட்டு வெளியே செல்வது வழக்கம். டான்சி வழக்கில் விடுதலையான பிறகும், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து வீடு திரும்பிய போதும் கோட்டூர்புரம் விநாயகரை தரிசித்து விட்டுதான் சென்றார்.

    வீட்டு வாசல்

    வீட்டு வாசல்

    தனது வீட்டு வாசலிலும் ஜெய கணபதி கோயிலை வைத்துள்ளார். எப்போது எங்கு சென்றாலும் அந்த கோயிலில் தரிசனம் செய்துவிட்டுத்தான் புறப்படுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஜெயலலிதாவுடன் 36 ஆண்டுகளாக இருந்த சசிகலாவும் அவரது பாணியை பின்பற்றி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஜெய கணபதி கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

    சொத்துக் குவிப்பு

    சொத்துக் குவிப்பு

    அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் (அதாவது அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக) பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்ல நேரிட்டது. அத்துடன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும் ஜெயகணபதி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு திரும்பினார்.

    ஜெயகணபதி

    ஜெயகணபதி

    அதே போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் அவருக்கு பிடித்த கொழுகட்டை, மோதகம், சுண்டல், எள்ளு உருண்டை, அவல், பொரி ஆகியவற்றை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சசிகலாவும் இளவரசியும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெய கணபதி கோயிலுக்கு சென்றனர்.

    சுவாமி தரிசனம்

    சுவாமி தரிசனம்

    அங்கு இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர், அப்போது சசிகலா தனது கண்களை கைகுட்டையால் துடைத்தார். ஜெயலலிதாவின் நினைவுகளால் கண் கலங்கினாரா என தெரியவில்லை. சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் முழு முதற்கடவுளான விநாயகர் அவருக்கு "ஜெயத்தை" தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்ஜிஆருக்கும் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் தரிசன வரலாறுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+