கர்நாடகாவில் நேர்மையான அதிகாரியாக இருந்த தமிழர் சசிகாந்த் செந்திலுக்கு காங். சீட் கொடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றியவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் 2009 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான செந்திலின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமம்.

உதவி ஆட்சியர்

உதவி ஆட்சியர்

இவர் திருச்சிராப்பள்ளி பாரதிதான் பல்கலையில் பொறியியல் பட்டம் பயின்றுவிட்டு 2009-ஆம் ஆண்டு மாநில அளவிலான தேர்வில் முதல் நபராக தேர்ச்சி பெற்றார். இவர் 2009-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்தார்.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில் 2017ஆம் ஆணடு முதல் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்த செந்தில் மத்திய அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவர் கடந்த ஆண்டு ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் இணையும் முடிவை எடுத்தார். இதையடுத்து அவர் தினேஷ் குண்டுராவ், கே எஸ் அழகிரி உள்ளிட்டோரை சந்தித்து அவர் காங்கிரஸில் இணைந்தார்.

நேர்மையான அதிகாரி

நேர்மையான அதிகாரி

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் செந்தில். இவருக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் நேர்மையான அதிகாரியாக இருந்த சசிகாந்திற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு தர வேண்டும் என சமூகவலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சசிகாந்திற்கு சீட்

சசிகாந்திற்கு சீட்

புதிய சட்டசபையில் சசிகாந்த் இடம்பெற வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் பல இருப்பதால் சசிகாந்திற்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் நெட்டிசன்கள் கருதுகிறார்கள். சசிகாந்திற்கு சீட் கொடுப்பது சரியான நபரை தேர்வு செய்வதற்கு சமம் என்கிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சி சசிகாந்திற்கு சீட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+