சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பரப்பு.. நேற்று சேர்ந்தார்.. இன்று சசிரேகாவுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு!

அதிமுகவில் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சசிரேகா

Google Oneindia Tamil News

Recommended Video

    Sasirekha : சசிரேகாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய அதிமுக- வீடியோ

    சென்னை: அதிமுகவில் தம்பதி சகிதமாக இணைந்த சசிரேகாவுக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் சசிரேகா. அக்கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளரும்கூட.

    Sasirekha has appointed as Spokesperson of AIADMK

    டிவி விவாதங்களை பார்ப்பவர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். தினகரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழிய சண்டை போடுவார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் இவர் பேசாத பேச்சில்லை.

    ஆனால் தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு இவர் அமமுகவில் சரிவர செயல்படாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று திடீரென சசிரேகா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். கூடவே வழக்கறிஞரான தன் கணவன் அன்பு, மற்றும் ஆதரவாளர்களையும் அழைத்து கொண்டு போய் அதிமுகவில் இணைத்துள்ளார்.

    Sasirekha has appointed as Spokesperson of AIADMK

    கட்சியின் செய்தி தொடர்பாளரான சசிரேகாவும், அமமுகவின் வழக்குகளை கவனித்து கொண்டு இருந்த அவரது கணவர் அன்பு இருவருமே ஒரே நேரத்தில் கட்சியை விட்டு பறந்ததால், தினகரனுக்கு பெருத்த ஷாக் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இப்போது கட்சியில் சேர்ந்த கையோடு, சசிரேகாவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி தரப்பட்டுள்ளதாம். இதற்கான அறிவிப்பினை அதிமுகஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இருவருமே கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

    புதிதாக யார் வந்தாலும், அவர்களுக்கு திமுகதான் பெரிய பொறுப்பை தந்து இன்ப அதிர்ச்சி தரும் என்றால், எடப்பாடியாரும் திமுகவுக்கு நிகராக இறங்கிவிட்டார் என்கிறார்கள்.

    English summary
    Sasirekha has appointed as AIADMK spokesperson by Edapadi Palanisamy and O Panneerselvam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X