காவலர் வில்சன், திருபுவனம் ராமலிங்கம் கொலை - திமுகவை கேள்வி கேட்கும் எச்.ராஜா
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: திருபுவனத்தில் ராமலிங்கம் கொலை தொடர்பாகவும், காவலர் வில்சன் கொல்லப்பட்ட போதும் முழு மவுனம் சாதித்த திமுக இப்போது சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்கு உயிரோடு அழைத்துச்சென்ற போலீஸ், அவரை சடலமாகத்தான் உறவினர்களிடம் ஒப்படைத்தது. இருவரின் மரணம் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் பேசப்படுகிறது.

ட்விட்டரில் உள்ளூர் மக்கள் முதல் உலக பிரபலங்கள் வரை பதிவிட்டு காவல்துறையினருக்கு எதிராக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர் எச். ராஜாவும் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு (custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது... தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது... இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது... அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பாக பதிவிட்டனர்.

இந்த நிலையில் அவர் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று கூறி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில்
தஞ்சை திருப்புவனத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை திமுக கண்டிக்கவில்லை.காவலர் வில்சன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதற்கும் முழு மௌனம். இச்சம்பவத்தில் மேஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். திமுக இரட்டை வேடம் ஏன் என்று கேட்டிருக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தொடர்ந்து ட்வீட் பதிவிட்டு வருகிறார். அவரது சமீபத்திய ட்வீட்டில் அரசை கேள்வி கேட்டிருந்தார்.

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில்
குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாகவே எச். ராஜா ட்வீட் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications