தவெக விஜய் இளைஞர்கள் ஓட்டுகளை அள்ளப்போறாராம் .. சத்தியம் டிவி தேர்தல் கணிப்பு ரிசல்ட்!
சென்னை: தவெக இந்த முறை முதல்முறையாக தேர்தல் களம் காணும் நிலையில், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவைப் பெறுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. சத்தியம் டிவி கருத்துக்கணிப்பின்படி, இளைஞர்களின் ஆதரவை அள்ளுகிறார் விஜய்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு 39% ஆதரவு கிடைத்துள்ளது. திமுகவுக்கு 26% பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

2026 சட்டசபை தேர்தல் சர்வே
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி vs தமிழக வெற்றிக் கழகம் vs நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியை சந்திக்கப் போகிறது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் டஃப் ஃபைட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2026ல் எங்கள் ஆட்சி என தவெகவினர் முழங்கி வரும் நிலையில், அக்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு எப்படி உள்ளது என்பது கணிக்க முடியாததாகவே உள்ளது.
இந்நிலையில், சத்தியம் டிவி சார்பில் தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும், இளைய தலைமுறையினர், முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ண ஓட்டங்களையும் படம் பிடித்து அளித்துள்ளது சத்தியம் டிவி.
தவெக முதலிடம்
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்,
திமுக - 26%
அதிமுக - 18%
தவெக - 39%
நாம் தமிழர் கட்சி - 12%
மற்றவை - 5%
இளைஞர்கள் மத்தியில் ஆதரவு
அதேபோல, இளைய தலைமுறை எனப்படும் 18 முதல் 30 வயது வரையிலான வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு 30% ஆதரவு கிடைத்துள்ளது. திமுகவுக்கு 28% பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.
இளைய தலைமுறையினர் (18-30 வயது வரை) ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு,
திமுக - 28%
அதிமுக - 20%
தவெக - 30%
நாம் தமிழர் கட்சி - 18%
மற்றவை - 4%
ஆதரவு இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்தமாக தொகுதிகளில் கருத்துக்கணிப்பை பார்க்கும்போது, திமுக, அதிமுக கூட்டணிகளே பெரும்பாலும் முந்துகின்றன.












Click it and Unblock the Notifications