"வயிறெரியுது".. ஓவர் TORTURE.. வீரம், புண்ணாக்குன்னு பேசி நம்ப வச்சவனையும் சேர்த்து.. எகிறிய கஸ்தூரி
நடிகை கஸ்தூரி, பரங்கிமலை சத்யா மரணத்துக்கு நீதி கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: சென்னையில் நடந்த சத்யா கொலைக்கு நீதி கேட்டு பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.. அந்த வகையில், நடிகை கஸ்தூரி கடும் கொந்தளிப்புடன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா.. 20 வயதாகிறது.. இவரது அம்மா ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.. 23 வயதாகிறது.. இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன்.. அதனால், சத்யா வசித்து வந்த அதே போலீஸ் குவார்ட்டஸிலேயேதான் இவர்களும் வசித்து வந்துள்ளனர்.

டார்ச்சர்
சத்யாவும் சதீஷும் கடந்த சுமார் 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வந்துள்ளார் சத்யா.. ஆனால், கடந்த சில மாதங்களாக சதீஷுக்கும் சத்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.. சதீஷின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறி சத்யா அவரை தவிர்க்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனம் உடைந்த சதீஷ் சத்யாவை பல முறை பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்.

துண்டு துண்டு
ஆனால் சத்யா அதற்கு உடன்படவில்லை.. தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து சதீஷ் சத்யாவிடம் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. இந்த நிலையில் நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் சென்று, சத்யாவை சந்தித்து மீண்டும் அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

எலக்ட்ரிக் ட்ரெயின்
அந்த சமயத்தில் வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயிலில் பிடித்து தள்ளிவிட்டதுமே சத்யாவின் தலை துண்டு துண்டாக சிதறி விழுந்துள்ளது.. இதையடுத்து தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது..

2 உடல்கள்
ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறினர்.. கடந்த 2 நாட்களாகவே இதுகுறித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகினற்ன.. அடுத்தடுத்து நடந்த இந்த துயர சம்பவங்களை கண்டு தமிழக மக்களும் உறைந்து போயுள்ளனர்.. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், சத்யாவின் மரணத்துக்கு நீதியும் கேட்டு வருகின்றனர்,.

TORTURE
அந்த வகையில் சமூக அக்கறை நிறைந்தவரும், மிகச்சிறந்த பேச்சாளரும், நடிகையுமான கஸ்தூரியும் தன்னுடைய ஆதங்கத்தை கண்ணீராய் கொட்டி உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட் ஒன்றினையும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதில், விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து torture பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி.. வயிறெரியுது" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி அக்கா
கஸ்தூரி இப்படி சொன்னதுமே, ஏராளமானோர் திரண்டு வந்து தங்கள் ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.. குறிப்பாக, "இந்த மனித உரிமை.. பெண்கள் நல அமைப்பு.. இப்படி யாருமே இதுக்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டாங்களா கஸ்தூரி அக்கா? நீங்களாச்சும் எதாவது மீடியாவுல கிழிச்சி தொங்க விடுங்க... அன்று நுங்கம்பாக்கம் இன்று பரங்கிமலை நாளை எங்கோ? முற்றுபுள்ளி வைக்க முன் வருவோம்" என்று கஸ்தூரியிடம் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் ட்விட்டர்வாசிகள்..!!!
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications