தவெகவில் சேர்ந்து சொந்த செல்வாக்கை இழந்த சத்தியபாமா? கடந்த தேர்தலை விட வாக்குகள் கடும் சரிவு!
தாராபுரம்: கடந்த பொதுத் தேர்தலில் 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் சத்தியபாமா. தற்போது வாக்கு வித்தியாசம் 9,471 வாக்குகள் மட்டுமே. கடந்த தேர்தலில் பெற்றதை விட ஆளுங்கட்சியான தவெக சார்பில் நின்று வாக்குகளை இழந்துள்ளார் சத்தியபாமா.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில், தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் திமுக வேட்பாளர் டி.இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

கடந்த தேர்தர்லில்
திமுக வேட்பாளர் டி.இந்திராணி 64,373 வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பி.சத்தியபாமா, மே 25 ஆம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பி.சத்யபாமாவுக்கு தவெக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
விஜய் தீவிர பிரச்சாரம்
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நடந்து சென்றும், முருங்கைக்காய் பறித்துக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார் முதல்வர் விஜய்.
தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6 ஆம் நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 1.79 லட்சம் பேர் வாக்களித்தனர். அதாவது 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பொதுத்தேர்தலின்போது 89.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இடைத்தேர்தலில் அது 80.30 சதவீதமாக குறைந்தது.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் 4 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார். 5வது சுற்று முதல், தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
சத்தியபாமா வெற்றி
5வது சுற்று தொடங்கி, ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தாராபுரம் தொகுதியில் 23 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,4711 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளும், நாதக வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வாக்கு வித்தியாசம் குறைவு
கடந்த பொதுத் தேர்தலில் 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் சத்தியபாமா. தற்போது வாக்கு வித்தியாசம் 9,471 வாக்குகள் மட்டுமே. கடந்த தேர்தலில் பெற்றதை விட ஆளுங்கட்சியான தவெக சார்பில் போட்டியிட்டு, அதை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார் சத்தியபாமா.
கடந்த தேர்தலில் அதிமுக 81 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போது 45,280 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்து தவெகவிடம் ரூபாய் 50 கோடி வாங்கிக்கொண்டு கட்சி தாவி விட்டதாக சத்தியபாமாவை எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், அவர் பெற்ற வாக்குகள் கடந்த முறையை விட வெகுவாகக் குறைந்துள்ளன.



Click it and Unblock the Notifications
