காணாமல் போன விஜய்! களத்துக்கு வாங்க ப்ரோ.. எடப்பாடி பழனிசாமி செயல்பாடு சிறப்பு!- சத்தியம் டிவி சர்வே
சென்னை: எதிர்க்கட்சி வரிசையில் பொறுப்புடன் செயல்படும் தலைவர் யார் என்பது குறித்து சத்தியம் டிவி கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், விஜய் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி, பிறகு சண்டை, அண்ணாமலையை பகைத்துக்கொண்டது, மீண்டும் கூட்டணி, கூட்டணி ஆட்சியா? கூட்டணியாக நின்று வென்று ஆட்சியா? என பல்வேறு சலசலப்புகளில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் அவர்தான் சிறப்பான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டிருக்கிறார் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிமுக எப்போது பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததோ அப்போதே அதன் வாக்கு வங்கியை இழக்க தொடங்கிவிட்டது என்று அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அக்கட்சியின் தொண்டர்களிடையே கூட சில நேரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் எதிரொலித்திருந்தது. அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக அண்ணாமலை மீது புகார் எழுந்த நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக கழன்றபோது தொண்டர்கள் பட்டாசு வெடித்து அதை கொண்டாடினார்கள்.
ஆனால் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தற்போது மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதிமுக தலைவர்கள் முழுமையான ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக மாறிவிட்டனர் என்று திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தாலும் கூட, அதிமுக அதை கண்டுக்கொள்ளாமல் கூட்டணியில் தொடர்கிறது. மட்டுமல்லாது தமிழக அரசு எங்கெல்லாம் சறுக்குகிறதோ, அதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி அரசியல் செய்கிறது. அரசியல் செய்யத்தானே அரசியல் கட்சிகள்!
அப்படி எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்ட தலைவர்கள் வரிசையில் எடப்பாடி பழனிசாமி 56% பேரின் ஆதரவை பெற்றிருக்கிறார். அடுத்தபடியாக சீமான் 36% பேரின் ஆதரவையும், விஜய் 8% பேரின் ஆதரவையும், மற்றவர்கள் 13% பேரின் ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் பெற்ற ஆதரவை கூட விஜய் பெறவில்லை என்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் என்னதான் வீர வசனம் பேசினாலும் களத்திற்கு வர வேண்டும். எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும், மாற்றுக்கருத்துகளையும் எதிர்கொள்ள வேண்டும். களத்திற்கு வராமல் தலைவரானது எல்லாம் அந்த காலம் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு












Click it and Unblock the Notifications