சத்யராஜ் மகள் திவ்யா நேரா கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. பயில்வான் ரங்கநாதனுக்கு போட்ட வாய்ப்பூட்டு! ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யராஜ் மகள் திவ்யா, நேரடியாக கோர்ட்டுக்கே போய்விட்டார்.. கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து அவர் பேசிய பேட்டி, அதன்பிறகு அவரது சத்யராஜ் வெளியிட்ட ஆதரவு வீடியோ, தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் பேசியதாக கூறப்படும் கருத்துகள் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இந்த வழக்கில் திவ்யாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன நடந்தது?

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.. ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதுடன், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர்.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டவர்.

Sathyaraj Divya Case Bayilvan Ranganathan Case Divya Sathyaraj Court

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், "கணவன் - மனைவி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உண்மையாக விரும்பி சேர்ந்து வாழணும். கல்யாணம் ஆகிடுச்சுங்கிற ஒரே காரணத்துக்காக சேர்ந்து வாழக் கூடாது.. மதம், ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவதிலும் தனக்கு இஷ்டம் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி வெளியான பிறகு, திவ்யாவின் கருத்துக்கு அவரது தந்தையும் நடிகருமான சத்யராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.. மகளின் கருத்தை ஆதரித்து சத்யராஜ் சோஷியல் மீடியாவிலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், மூத்த சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் திவ்யா பற்றி சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக தெரிகிறது..

பயில்வான் ரங்கநாதன்

இதனால் தன்னை பற்றி பொய்யான, அவதூறான கருத்துகளை பேசியதாக திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டியதுடன் நீதிமன்றமும் சென்று புகார் தெரிவித்தார்..

தனது பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் என்னைப் பற்றி பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும், இதனால் தனக்கு மன உளைச்சலும், நற்பெயருக்கு பாதிப்பும் ஏற்பட்டதாக கூறி, பயில்வான் ரங்கநாதன் மற்றும் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் முகைதீன் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1 கோடி நஷ்டஈட்டுத் தொகை

அதுமட்டுமல்லாமல், வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியையும் வழங்க வேண்டும் என்றும் கோரினார். எதிர்காலத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பேசுவது, எழுதுவது, வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது போன்றவற்றுக்கு பயில்வான் ரங்கநாதனுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. திவ்யா சத்யராஜ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு முடியும் வரை அவருக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளை மேலும் பரப்புவதற்கு பயில்வான் ரங்கநாதனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

மேலும், திவ்யா சத்யராஜுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகள் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வெளியிடப்படுவதையும் அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூகுள், பேஸ்புக் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேட்டி ஒன்றில் திவ்யா சத்யராஜ் தெரிவித்த கருத்தில் தொடங்கிய விவகாரம், தந்தை சத்யராஜின் ஆதரவு, அதன்பிறகு எழுந்த சர்ச்சை, ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு என அடுத்தடுத்த கட்டங்களை கடந்து, தற்போது நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையிலும் வந்து நிற்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+