சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. நல்ல சிந்தனை இல்லையா? உயர்நீதிமன்றம் விளாசல்
சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு போலீஸ் தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சாட்டை துரைமுருகனின் வீடியோக்களை குறிப்பிட்டு நீதிபதி புகழேந்தி கடும் விமர்சனங்களை வைத்தார்.
யூ டியூபர் சாட்டை துரைமுருகன் நேற்று முதல்நாள் மாலை மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார். இந்த முறை அவருக்கு பெயில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்று கூறப்படுகிறது. இரண்டு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பெயிலில் வந்திருந்த சாட்டை துரைமுருகன் தற்போது இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார், பின்னர் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவதூறு வழக்கு
இந்த அவதூறு வழக்கில், முதல்வருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எதிராக இனிமேல் அவதூறு பரப்பமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் வழங்கியதால் சாட்டை துரைமுருகனுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின் சாட்டை துரைமுருகனுக்கு இந்த பெயில் வழங்கப்பட்டது. எழுத்துபூர்வமாக துரைமுருகனிடம் இதற்காக உறுதி மொழி வாங்கப்பட்டது.

உறுதிமொழி
அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் இனி அவதூறு பரப்ப மாட்டேன். தவறுதலாக பேசிவிட்டேன். இனி இதுபோல அவதூறு பரப்ப மாட்டேன் என்று துரைமுருகன் உறுதியாக கூறினார். இதையடுத்தே அவருக்கு பெயில் வழங்கப்பட்டது. ஆனால் விதியை மீறி முதல்வருக்கு எதிராக சாட்டை துரைமுருகன் கடந்த சில மாதங்களுக்கு
முன் கன்னியாகுமரியில் அவதூறாக பேசினார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

நீதிபதி புகழேந்தி
இதனால் இவர் ஜாமீன் விதிகளை மீறிவிட்டதாக கூறி போலீஸ் மீண்டும் வழக்கு தொடுத்தது. எனவே இவரின் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் சாட்டை துரைமுருகனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த வாரமே கண்டித்து இருந்தது.

விமர்சனம்
இந்த வழக்கில் கடந்த வார விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரம் வெறும் பேப்பர்தான் என்று நினைக்காதீர்கள்.. கவனமாக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தனது நேரத்தை தாண்டி உழைக்கிறார். உங்களால் பாராட்ட முடியவில்லை என்றாலும் அவதூறாக பேச வேண்டாம் என்று குறிப்பிட்டார். அதேபோல் சாட்டை துரைமுருகன் வீடியோவை பார்த்து நான் உத்தரவு போட முடியாது.

கண்டனம்
அவர் வீடியோவில் பேசியதை எழுத்து பூர்வமாக போலீஸ் தாக்கல் செய்திருக்க வேண்டும். நான் உத்தரவிட்டும் இன்னும் எழுத்துபூர்வமாக விவரங்களை தாக்கல் செய்யாதது ஏன்? போதிய அவகாசம் வழங்கியும் போலீஸார் தாக்கல் செய்யவில்லை. மாநில முதல்வரை அவதூறாக விமர்சனம் செய்ததில் இவ்வளவு அலட்சியமா என்று போலீஸ் தரப்பிற்க்கும் நீதிபதி குட்டு வைத்து இருந்தார்.

இன்று
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் பேசிய விஷயங்களை போலீசார் தரப்பு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
சாட்டை துரைமுருகனின் வீடியோக்களை எழுத்துபூர்வமாக படித்த நீதிபதி புகழேந்தி சாட்டை துரைமுருகனுக்கு சரமாரி விமர்சனங்களை வைத்தார். அதில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

விமர்சனம்
கருத்து சுதந்திரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் யூ டியூபில் பேசுவீர்களா?. நீங்கள் பேசியதை கேட்கவே அருவெறுப்பாக இருக்கிறது. சில வார்த்தைகளை படிக்க கூட முடியவில்லை. இவ்வாறு எப்படி பேசலாம்? உங்களுக்கு நல்ல சிந்தனை கிடையாது. உங்களுக்கு என்று செய்வதற்கு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் கிடையாதா.

தீர்ப்பு
நீங்கள் சொன்ன முதல் வார்த்தையை படிக்கவே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது என்று நீதிபதி புகழேந்தி கடும் விமர்சனங்களை வைத்தார். இந்த நிலையில் உங்கள் மீதான ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை நீதிபதி புகழேந்தி தீர்ப்பிற்காக வழக்கை ஒத்திவைத்துள்ளார். இது போக இன்னொரு பக்கம் ஜாமீன் கட்டுப்பாடுகளை மீறி ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 9 பெண் ஊழியர்கள் பேர் பலியானதாக இவர் பொய்யான செய்தியை பரப்பியதற்காக சாட்டை துரைமுருகன் கைதாகி உள்ளார்.
Recommended Video

இன்னொரு வழக்கு
பொய்யான செய்தி, வதந்தி, அவதூறு பரப்ப மாட்டேன் என்று கூறியவர் அதை மீறி, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 9 பெண் ஊழியர்கள் பேர் பலியானதாக பொய்யான செய்தியை பரப்பி உள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, திருச்சிசண்முகா நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது போலீசார் மூலம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். பின்னர் திருவள்ளூர் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications