ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ராஜவர்மன்.. அதிமுகவில் இருந்து நீக்கிய ஓபிஎஸ் இபிஎஸ்
சீட் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆண்டவனாலும் கூட அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று சொல்லி விட்டு அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் அதிருப்தியில் இருந்தார். இன்று சென்னையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் உயர்த்தி பேசினார். எல்லாமே சசிகலாதான். அவர் இல்லாவிட்டால் கட்சியே இப்போது இருந்திருக்காது என்றும் சொன்ன அவர், சசிகலாவினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.
அதிமுக படுதோல்வியடையும் என்று சொன்ன அவர், அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சொன்னார். அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சாபம் விடுவது போலவும் பேசினார்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/uZnWrx4g3p
— AIADMK (@AIADMKOfficial) March 11, 2021
இந்நிலையில், ராஜவர்மனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ (சாத்தூர் சட்டமன்ற தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications