சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று ஒரு முக்கிய மாற்றம்.. பயணிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு!
சென்னை: மொஹரம் பண்டிகையை ஒட்டி இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது மொஹரம். அந்த வகையில் இந்தாண்டும் உலகம் முழுவதும் இன்று மொஹரம் அனுசரிக்கப்படுகிறது. மொஹரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொஹரம் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை என்பதால், இன்று (ஜூலை 17) சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து, மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications