பட்டா கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்.. சத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்.. ஷாக் வீடியோ
சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் 6.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்துள்ளார். அலுவலகத்திற்குள் வந்ததும் தனது guitar bagஇல் மறைந்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து அலுவலகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.

மேலும், அங்கிருந்த அலுவலக கண்ணாடி, கணினி, டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அந்த நபரை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் காதில் கேட்க முடியாத ஆபாச சொற்களால் அவர்களைத் திட்டினார்,

மேலும், "நல்ல வீடியோ எடுங்கள்.. நாளைக்கு இது எல்லாம் முக்கிய செய்திகள்ல வரனும்" என்றும் அவர் ஆவேசமாகக் கத்துகிறார். இந்த வீடியோக்களும் ட்விட்டரில் தற்போது வைரலாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், எதற்காக இப்படித் தாக்குதல் நடத்தினார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

தலைநகர் சென்னையில், அதுவும் ஊடக நிறுவனம் மீதே இதுபோன்ற வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications