பயங்கரம்.. பட்டாக்கத்தியுடன்.. சத்யம் டிவி ஆபிசில் தாக்குதல்.. கொந்தளித்த திருமாவளவன்.. கண்டனம்..!
சத்யம் டிவி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அவரது பின்னணியில் யாவர் இருப்பினும் அவர்களைக் கைது செய்யவேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராயபுரத்தில் சத்தியம் டிவி ஆபீஸ் அமைந்துள்ளது.. இங்கு நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்து, மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து ஆபீசில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.
அத்துடன், அங்கிருந்த கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், டேபிள் போன்றவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தகவல்
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இதை அங்கிருந்த ஊழியர்கள் வீடியோ எடுத்தனர்.. இதை பார்த்த அந்த நபர், ஆத்திரமடைந்து அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.. "எடுங்க.. நல்ல வீடியோ எடுங்க.. இதெல்லாம் நாளைக்கு முக்கிய செய்தியா வரணும்' என்று சத்தம் போட்டு பேசினார். அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது.

போலீஸ்
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்த பட்டாக்கத்தி, கேடயம், குஜராத் பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.. மேலும் அவரிடம் விசாரணையும் நடந்தது.. முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்மநபர் கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன் குஜராத்தில் இருக்கும் தனது அண்ணனை சந்திப்பதற்காக குஜராத் சென்றுள்ளார்... அங்கேதான், ஆன்லைனில் கத்தி, கேடயம் போன்றவற்றை ஆர்டர் செய்து அவற்றை வாங்கியிருக்கிறார்.

சென்னை
அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு நேராக சென்னை வந்து சத்தியம் டிவி ஆபீசுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது... இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்... சென்னையில் ஒரு ஊடக நிறுவனத்தின் மீதே தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
சத்யம் டிவி
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அவரது பின்னணியில் யாவர் இருப்பினும் அவர்களைக் கைது செய்யவேண்டும்.,,இந்த இழிசெயலை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications