தருமபுரி மாவட்டத்தில் திமுக-அதிமுக கூட்டணி இடையே நீயா? நானா? போட்டி.. சத்தியம் டிவி சர்வே!
சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 2 இடங்களில் எளிதாக வெற்றி பெரும் என்றும் 3 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்றும் சத்தியம் டிவி கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கருத்து கணிப்புகள் வருகின்றன
ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இந்த முறை விட்டால் இனி முடியாது என்ற வகையில் திமுகவும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.தலைவர்களின் தேர்தல் பிரசாரம் ஒரு பக்கம் நடந்தாலும், மறுபுறம் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டம் நிலை என்ன?
இதுவரை நடந்து முடிந்துள்ள கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதமாக உள்ளன. அதிமுகவுக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்றும் கூறி இருந்தது. இந்த நிலையில் சத்தியம் டிவி சார்பில் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளன.சுமார் 2 லட்சம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக 45% வாக்குகள் பெரும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக 43% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பாலக்கோடு தொகுதியில் மநீம-4%; தேமுதிக-3%; நாம் தமிழர் 3% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

பாமக எப்படி?
பென்னாகரம் தொகுதியில் திமுக 43% வாக்குகளும், பா.ம.க. 41% வாக்குகள் பெறும் என்றும் கூறியுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் திமுக 39% வாக்குகளும் அதிமுக 41% வாக்குகளும் அமமுக 20% வாக்குகளை பெரும் என்றும் கருத்து கணிப்பு மூலம் தெரியவருக்கிறது. தருமபுரி தொகுதியில் திமுக 49%; பா.ம.க. 34%; வாக்குகள் பெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி,எம் ஆதிக்கம்
அரூர் தொகுதியில் சி.பி.எம் 43%; அதிமுக 29%; மநீம- 9%; நாம் தமிழர்- 6% வாக்குகள் பெறும் என்றும் சத்தியம் டிவி சர்வே கூறியுள்ளது. அதாவது தருமபுரியில் உள்ள 5 தொகுதியில் 2 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெரும் என்றும் 3 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications