சீனுக்குள் வந்த செளராஷ்டிரா சமூகம்.. மதுரையில் கவனிக்க வைத்த மாநாடு! துண்டு போடும் அரசியல் கட்சிகள்!
சென்னை: 202 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையை துவக்கி விட்டன. சமூக அமைப்புகளும் தேர்தலில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற செளராஷ்டிரா சமூக மாநாடு கவனிக்க வைத்திருக்கிறது. அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என பல கட்சிகளை அழைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பாக தேர்தல் வேலைகளை துவக்கி விட்டன. தங்கள் பகுதிகளில் போட்டியிட விரும்பும் அரசியல் புள்ளிகள், தற்போது கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, என தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் பல்வேறு சமுதாய அமைப்புகளும் மாநாடுகள் நடத்தி வருகிறது. திடீர் திடீரென சாதி சங்கங்கள் முளைத்து ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசியலில் மாற்றம் தரும் மதுரையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

சௌராஷ்டிரா சமூகம்
திமுகவில் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுகவில் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் என பலரும் சமுதாய மாநாடுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் தான் மதுரையில் சௌராஷ்டிரா சமூகத்தினர் நடத்திய மாநாடு கவனிக்க வைத்திருக்கிறது. குஜராத் பகுதியில் இருந்து அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர் படையெடுப்புக்கு பயந்து மதுரை வந்தவர்கள் சௌராஷ்டிர சமூகத்தினர் என கூறப்படுகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் தற்போது மதுரையின் பல்வேறு பகுதிகளில் விரவிக் கிடக்கின்றனர்.
சௌராஷ்டிரா வாக்கு வங்கி
அது மட்டுமில்லாமல் திண்டுக்கல், கரூர், பரமக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் சௌராஷ்டிரா சமூகத்தினரின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது.குறிப்பாக திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவில் இருக்கின்றனர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சௌராஷ்ட்ரா அரசியல் நடவடிக்கை குழு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. சௌராஷ்டிரா மக்களின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிப்பதற்காக டிசம்பர் 28ஆம் தேதி இந்த மாநாடு நடைபெற்றது.
மதுரை அரசியல் மாநாடு
இதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விஷயம். இந்த மாநாட்டில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர் என்பதுதான். திமுக, அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் என அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மூர்த்தி, அதிமுக சார்பில் மதுரை டாக்டர் சரவணன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் சரவணன்
சௌராஷ்டிரா மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும், சௌராஷ்டிரா மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கின்றனர். அதிமுக சார்பில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் சரவணன் கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் சௌராஷ்டிரா மக்களுக்கு மேயர் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கி இருக்கிறார். அந்த வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவார் என உறுதி அளித்துள்ளார்.

நாம் தமிழர் சீமான்
தொடர்ந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்," எனக்கும் சௌராஷ்டிரா மக்களுக்கும் நல்ல உறவு உண்டு.. மரத்திற்கு மாநாடு போட்டேன்.. மரத்தோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது மக்களுக்கு குரல் கொடுக்கிறேன். இந்த மாநாட்டில் நான் பங்கேற்றதால் சவுராஷ்டிரா சமூகத்தினர் அனைவரும் சீமானுக்கே ஓட்டு போடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டில் இந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்" என பேசினார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் கலந்து கொண்டு பேசிய நிர்வாகிகள் சௌராஷ்ட்ரா சமுதாயத்தினருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் தேர்தலில் உரிய முக்கியத்துவம் தரப்படும் என பேசி இருக்கிறார்.

அமைச்சர் மூர்த்தி
திமுக சார்பாக கலந்து கொண்ட மூர்த்தியும் வழக்கம் போல வாக்குறுதிகளை அள்ளி கொடுத்திருக்கிறார். சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த எஸ்எஸ் சரவணனை எம்எல்ஏ ஆக்கியதையும் நினைவு கூர்ந்து இருக்கிறார். இப்படி அனைத்துக் கட்சிகள் செளராஷ்டிரா சமூக வாக்குக்காக வரிந்து கட்டும் நிலையில், திமுகவுக்கு எதிரான மனநிலையை சற்று அதிகமாகவே பார்ர்க்க முடியது. கட்சியைத் தாண்டி சௌராஷ்ட்ரா சமூகத்துக்கு எஸ்எஸ் சரவணன் எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தால் தான் அவர் மீண்டும் தோற்றார் என்ன சுட்டிக் காட்டும் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகள், வரும் தேர்தலில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு தொகுதிகளை கேட்போம். ஆனால் எங்கள் சமூகத்திற்கு உள்ளேயே வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. இங்கு மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications