ஏசி விடிய விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? மின்வாரியமே கொடுத்த அட்வைஸ் இதை பாலோ பண்ணுங்க
சென்னை: வீட்டில் ஏசி வாங்கி மாட்டும் பலரும் மின்சார கட்டணம் தாறுமாறாக போகுமே என்ற அச்சத்துடன் இருப்பதை பார்க்க முடிகிறது. ஏசி விடிய விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக மின்சார வாரியம் தெளிவான டிப்ஸ் ஒன்று கொடுத்துள்ளது. அதை பார்க்கலாம்.
கோடை வெயில் உக்கிரம் காட்ட தொடங்கியுள்ளது. வீட்டில் இருந்து பகல் நேரத்தில் வெளியே செல்லவே அச்சப்படும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே போவதற்கு மட்டுமில்லை.. வீட்டிற்குள் இருந்தாலே ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியாது எனும் அளவுக்கு உஷ்ணம் உள்ளது.

தமிழக மின்சார வாரியம் டிப்ஸ்
இதனால், நடுத்தர வசதி கொண்டவர்கள் பலரும் வீட்டில் ஏசி வாங்கி மாட்டுவதை பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் ஏசி பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தாறுமாறாக போகுமே என்ற பயமும் மக்களுக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. எத்தனை டன் ஏசி, அறையின் அளவுக்கு ஏற்ற ஏசி பயன்படுத்துகிறோமா என்பதை பொறுத்து மின் கட்டணத்தில் கொஞ்சம் மிச்சம் பிடிக்க முடியும்.
ஆனால், இதன் அளவு சரியாக எவ்வளவு என்பது, ஏசி வாங்கும் பலருக்கும் இருக்கும் பொதுவான குழப்பமாக உள்ளது. இந்த சூழலில்தான் தமிழக மின்சார வாரியத்தின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்த தெளிவான டிப்ஸ் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
அறை அளவு: ஏசி திறன்
0-100 சதுர அடி: 0.8 டன்
100-150 சதுர அடி: 1.0 டன்
200-250 சதுர அடி: 1.5 டன்
200-250 சதுர அடி: 1.5 - 2.0 டன்
250-300 சதுர அடி: 2.0 டன்
300 + சதுர அடி: 2.0 டன் & அதற்கு மேல்
சரியான அளவு, சரியான குளிர்ச்சி, சரியான சேமிப்பு என இந்த பார்முலாவை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறை அளவின்படி இது பொதுவான பரிந்துரை மட்டுமே என்றும் மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. மின்சாரத்தை சேமித்தால் அதன் மூலம் மின் கட்டணமும் மிச்சமாகும். இந்த அளவின் படி உங்கள் வீட்டில் ஏசியை வாங்கி பொருத்தினால், தேவையற்ற மின் செலவுகளை ஓரளவு தவிர்க்க முடியும்.
ஏசி டெம்பரேட்சர் அளவு
அதேபோல ஏசி டெம்பரேட்சர் அளவும் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி உடல் நலனுக்கு உகந்த அளவாக நிபுணர்கள் பரிந்துரைக்கும் டெம்பரேட்சர் அளவு என்ன என்றால் 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் ஏசி டெம்பரேட்சர் அளவை மெயிண்டயின் செய்ய வேண்டும் என்பதேயாகும்.
ஏனெனில் தென்னிந்திய பகுதிகள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்தவையாகவும், கடுமையான வெப்பம் இல்லாத பகுதியாகவும் இருப்பதால் அதிகபட்ச குளிர்ச்சியை கிடைக்க கொஞ்சம் உயர்ந்த வெப்பநிலையே மிகவும் ஏற்றது என்று பரிந்துரைக்கிறார்கள். ஏசியில் ஒவ்வொரு டிகிரி குறைக்கும் போதும், மின்சார உபயோகம் 6 சதவீதம் அதிகரிக்குமாம். எனவே மின் பில்களைச் சேமிக்க, உங்கள் ஏசியை 18-20 என அதீத ஜில் போகாமல், 24-26 அளவே பயனுள்ளதாக இருக்கும் என்கிறர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications