கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடும் 6 வயது குழந்தை! நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்
சென்னை: கடுமையான இதய நோயால் 6 வயது குழந்தை மஹா திவ்யதர்ஷினி உயிருக்கு போராடி வருகிறாள். இக்குழந்தையை நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும்.
திருவள்ளூரை சேர்ந்த அருள்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண்ணை திருமணம் செய்திருந்தார். அருள்ராஜ் சாமானிய மனிதர். காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடைய அன்றாட கூலி ரூ.400தான். வருமானம் குறைவாக இருந்தாலும் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இழுத்தடிக்கும் வேலை, நிரந்தரம் இல்லாத சூழல்.. இதற்கிடையில் இவருக்கு இருந்த ஒரே ஆறுதல் குழந்தை மஹாதிவ்யதர்ஷினிதான்.

ஆனால் கடந்த சில நாட்களாக குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறது. கும்பிடாத சாமியில்லை, பார்க்காத வைத்தியமில்லை. ஆனால் வயிற்று வலி மட்டும் சரியாகவே இல்லை. இப்படி இருக்கையில்தான், மியாட் மருத்துவமனையில் குழந்தையை அருள்ராஜ் பரிசோதித்துள்ளார்.
குழந்தைக்கு தீவிர இதய பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இதனை VSD, MAPCAs என்று குறிப்பிடுகின்றனர். உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்யவில்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். சிகிச்சைக்காக ரூ. 5.5 லட்சம் செலவாகும். இவ்வளவு பணத்திற்கு அருள்ராஜ் எங்கு போவார்? ஆனால் அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது இந்த சமூகம்தான். சமூகத்தின் மீது உங்கள் மீதும், என் மீதும் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்.
நம்மால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றுவோம். சிறு துளிகள்தான் பெரிய வெள்ளமாக மாறும். எனவே, முடிந்த உதவியை செய்யுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications