உயிர் நாடியில் எட்டி உதைச்ச சவுக்கு சங்கர்.. ஆங்கர் மாலதியும் அடிச்சாங்க! தயாரிப்பாளர் பகீர் அறிக்கை
சென்னை: சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்ததாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தன்னை மிரட்டி சவுக்கு சங்கர் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் தனது உயிர் நாடியில் எட்டி உதைத்து தாக்கியதாக கூறியுள்ளார் சினிமா தயாரிப்பாளரான மகேஷ் ரம்யா. மேலும் சவுக்கு சங்கருடன் இருந்த மாலதி உள்ளிட்ட சிலரும் தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ள அவர்," நான் Red & Follow திரைப்படத்தின் தயாரிப்பாளர். நான் கொடுத்த புகாரின் பேரில் நேற்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
நான் அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட போது தவறுதலாக அவர் பதிவிட்ட என் படம் சம்மந்தமான விஷயங்களை நீக்க கோரிய போது ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.

சவுக்கு சங்கர் கைது
30.06.2025 அன்று நான் அவரது அலுவலகத்திற்கு சென்ற போது மீண்டும் என்னுடைய படத்தை பற்றி தரக்குறைவாக பேசாமல் இருக்க எனக்கு ரூபாய் 10 லட்சம் கொடு இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று என்னை பயமுறுத்தினார். நான் அதன்பிறகு என்னுடைய கையில் ரூ.1 லட்சம் தான் உள்ளது என்று கூறினேன். அதற்கு நான் என்ன பிச்சைக்காரனா என்று கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர்நாடியில் எட்டி உதைத்தார்.
தயாரிப்பாளர் மீது தாக்குதல்
அவர் மட்டுமில்லாமல் அவரது டீமில் உள்ள மாலதியும், அடையாளம் காட்டக்கூடிய நான்கு நபர்களும் என்னையும், என்னுடைய படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கிருந்து தப்பித்தோம் என்று நாங்கள் இருவரும் வெளியே வந்த பிறகு இயக்குநர் அவர்கள் என்னை சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்ற பின்பு மறுநாள் நான் ஜீலை 1ம் தேதியில் நான் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்தனர்.
மகேஷ் ரம்யா
தற்போது பத்திரிகை செய்திகளில் தவறுதலாக என்னுடைய பெயரை புருஷோத்தமன் என்று வெளியிடுகின்றனர். ஆனால் புருஷோத்தமன் என்பது என்னுடைய அப்பாவின் பெயர் (என்னுடைய பெயர் மகேஷ்) மகேஷ் ரம்யா என்பது என்னுடைய மனைவியின் பெயரையும் இணைத்து படம் தயாரிப்பு செய்துள்ளேன். தற்போது செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் தவறுதலாக ரூ.2 லட்சம் பிடிங்கி கொண்டார்கள் என்று செய்தி வருகிறது. அது முற்றிலும் தவறான செய்தியாகும்.
சவுக்கு சங்கர்
ஏனென்றால் அன்று சவுக்கு சங்கர் கைதின் போது வெளியிட்ட வீடியோவில் படித்த விவரத்தின் அடிப்படையில் என்னுடைய அப்பா பெயரையும், 2 லட்சம் பிடிங்கி கொண்டேன் என்று சவுக்கு சங்கர் அவர்களே அந்த வீடியோவில் தவறான செய்தியை பரப்பினார். நான் மற்றும் எனது இயக்குநர் இருவரும் அவரது அலுவலகத்திற்கே வரவே இல்லை என்றும் பொய்யான தகவலை கைதின் போது வெளியிட்டார்.
பணம் பறிப்பு புகார்
இதில் ஆயிஷா சாதிக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தான் கைது செய்ததாகவும், தவறுதலான செய்திகளையும் சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தவறான செய்திகளை ஊடகங்களிருந்து நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதில் ஆயிஷா சாதிக் என்பவர் இயக்குநர் வணக்கம் தமிழா சாதிக் அவர்களின் மனைவி ஆவார். அவரும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார். இது தான் உண்மையான தகவல். எனவே பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இதன் உண்மை நிலையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications