எதிராக தீர்ப்பு வருதுன்னு.. நீதிபதியையே மிரட்டுவீங்களா.. சவுக்கு சங்கருக்கு தலைமை நீதிபதி கண்டனம்
சென்னை: தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிடுமோ என்கிற பயத்தில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை வைப்பது, பொய்யான வதந்திகளை வாரி தூற்றுவது தவறானது என்று சென்னை உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீங்கள் ஒரு நீதிபதி மீது இன்னொரு நீதிபதியிடம் புகார் வைக்கிறீர்கள்.. அது தவறான செயல் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டார். இது போன்ற பழக்கத்தை எக்காலத்திலும் ஊக்குவிக்க முடியாது என நீதிபதி இன்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞரிடம் திட்டவட்டமாக கூறினார்.

சவுக்கு சங்கர் வழக்கு பின்னணி
முன்னதாக யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலக முடியாது என்று நீதிபதி வேல்முருகன் திட்டவட்டமாக கூறினார். இந்த நீதிமன்றத்தையும் 'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது எனவும் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறினார்.
இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா முன் சவுக்கு சங்கர் தரப்பு நீதிபதி வேல்முருகனுக்கு எதிராக புகார் அளித்தது. சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை மாநகர போலீஸ் தாக்கல் செய்த மனுவில், நீதிபதி பி. வேல்முருகன் சங்கருக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
தலைமை நீதிபதியும், நீதிபதி ஜி. அருண் முருகனும் இடம் பெற்ற முதல் டிவிஷன் பெஞ்ச் முன் வழக்கறிஞர் இது குறித்துப் புகார் தெரிவித்தார். நீதிபதி வேல்முருகன் சங்கரை 'பிளாக்மெயிலர்' என்று குறிப்பிட்டதாக புகார் வைத்தனர் . இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரத்தின் மீதும் மேல்முறையீடு செய்யலாம்; நீதிபதிகள் மீது அவதூறு பரப்பக் கூடாது" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கோபம் அடைந்த தலைமை நீதிபதி
"யாருக்கு எதிராக இந்தச் குற்றச்சாட்டு? 39 ஆண்டுகள் அனுபவம் கொண்ட உங்களை போன்ற வழக்கறிஞர் ஒருவர் வேறொரு அமர்வுக்கு முன் இப்படி குற்றச்சாட்டுகளை சுமத்துவது அதிர்ச்சி அளிக்கிறது," என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். "தங்களுக்கு எதிராக உத்தரவு வரும் என்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்களா? இது சரியான இடமல்ல; சட்டப்படி மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்த அல்லது துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என அவர் கடுமையாக எச்சரித்தார்.
சவுக்கு சங்கருக்கு டிசம்பர் 2025-ல், கிறிஸ்துமஸ் விடுமுறைக் கால அமர்வு (நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால்) இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அவர் இதய மற்றும் நீரிழிவு நோயாளி என்பதையும், போலீசாரால் அவரது சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள 17 குற்ற வழக்குகளில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டது.
கோர்ட் விடுமுறைக்குப் பிறகு, சென்னை மாநகர காவல்துறை இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது. சங்கரின் தாய் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைப்போல் அவருக்கு பெரிய உடல்நலப் பிரச்சினைகள் இல்லை என்றும், விடுதலையான பிறகு அவர் தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியது. மேலும், சில கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் சங்கர் மிரட்டியதாகவும், ஒரு வீடியோவில் விசாரணை அதிகாரியை 'கொலையாளி' என்று குறிப்பிட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது.
வழக்கு பின்னணி
ஜனவரி 19 அன்று, நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் எம். ஜோதி ராமன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் ஜாமீன் ரத்து மனு விசாரணைக்கு வந்தபோது, யூடியூபரின் வழக்கறிஞர் மூத்த நீதிபதி மீது சார்பு குற்றச்சாட்டை முன்வைத்து மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கில் இருந்து விலக நீதிபதி மறுத்துவிட்டார்.
"நீங்கள் அமர்வை பிளாக்மெயில் செய்ய முடியாது," என்றார் நீதிபதி வேல்முருகன். தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான நீதித்துறை வாழ்க்கையில் (இதில் 11 ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், 9 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும்) ஒருபோதும் எந்த வழக்கிலிருந்தும் விலகியது இல்லை என்றும், இந்த வழக்கிலிருந்தும் விலகப் போவதில்லை என்றும் அவர் வழக்கறிஞரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி வேல்முருகன் தலைமையிலான அமர்வு, ஜனவரி 20 (செவ்வாய்க்கிழமை) அன்று கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர். முனியம்ப்ராஜ் மற்றும் யூடியூபரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை கேட்டது. அதன் பின்னர், உத்தரவுகளை ஜனவரி 23 (வெள்ளிக்கிழமை) அன்று பிறப்பிப்பதாக அறிவித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்தான், சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் தலைமை நீதிபதி முன் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications