எனக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பா.. ஆடிப்போன சவுக்கு சங்கர்.. பரபரப்பு அறிக்கை
சென்னை: எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், நான் கடந்த 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அப்போது நான் சிகிக்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஆவணங்கள் திருடப்பட்டு, நான் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது போல், போலியாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளேன் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குறித்து அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அதாவது சவுக்கு சங்கருக்கு ஹெச்ஐவி தொற்று உள்ளதாகவும், இதுமருத்துவ பரிசோதனை அறிக்கை என்றும் கூறி தகவல்கள் பரவின. சில அரசியல் பிரமுகர்களுமே சவுக்கு சங்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட அறிக்கையில், "அண்மையில் எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனது சிகிச்சைக்கான ஆவணம் தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது.
அந்த திருடப்பட்ட ஆவணத்தினை மாற்றி, நான் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று போலியாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்த மருத்துவ ஆவணம் முற்றிலும் போலியானது ஆகும். நான் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பற்றிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது ஆகும். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
முன்னதாக சவுக்கு சங்கர் கடந்த அக்டோபர் 12ம் தேதி மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி வீடு திரும்பினார் . இதுபற்றி சவுக்கு சங்கர் அப்போது வெளியிட்ட பதிவில், இருதய பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு, நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறேன். எனது மருத்துவர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. என கூறியிருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications