சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. இனி ஓராண்டு வெளியே வர முடியாது!
சென்னை: நிபந்தனை ஜாமீனை பின்பற்றி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் ஓராண்டு வரை அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது.
யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசை குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டதோடு, சமூக வலைதளங்களிலும் கருத்துகள் தெரிவித்து வந்தார்.
12 வாரம் நிபந்தனை ஜாமீன்
இதற்கிடையே தான் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனை ஜாமீன் 12 வாரங்கள் கொடுக்கப்பட்டது.
சவுக்கு சங்கர் தலைமறைவு
சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார்.
ஆந்திராவில் கைது
சவுக்கு சங்கரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தான் ஆந்திராவில் லாட்ஜில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 8 ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.
குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
அதன்படி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல் புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக குண்டர் சட்டம் பாய்ந்தால் ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இதனால் சவுக்கு சங்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அணுகி குண்டர் சட்டத்தை உடைக்க முடியும். அது, நடந்தால் சவுக்கு சங்கர் ஓராண்டுக்கு முன்பே வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications