சவுக்கு சங்கரின் மகன் த***லை..அதிர்ச்சி பின்னணி? அம்மா பாத்துப்பாங்க..சவுக்கு போட்ட உருக்கமான பதிவு!
சென்னை: பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கரின் மகனும் வழக்கறிஞர் ஆர்த்தியின் மகனுமான தியோ ஆழிசை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒழுங்காக படிக்கவில்லை என தாயார் கண்டித்ததால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மரக்காணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சொர்க்கத்தின் தனது தாயார் தனது மகனை பார்த்துக் கொள்வார் என சவுக்கு சங்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான ஊடகவியலாளராகவும் அரசியல் விமர்சகராகவும் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். விஜிலன்ஸ் துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர் அரசு ரகசியங்களை வெளியிட்டதாக கூறி பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து சவுக்கு என்ற வலை தளத்தையும், சவுக்கு மீடியா என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். பிரபல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவரது சேனலில் முன்வைப்பது வழக்கம்.
சவுக்கு சங்கர்
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்ததும் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். சவுக்கு சங்கருக்கும் பிரபல வழக்கறிஞரான ஆர்த்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவன் மனைவி பிரிந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் பகுதியில் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ஆர்த்தி வழக்கறிஞர்
அவரது மகன் தியோ ஆழிசை மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தியோ ஆழிசை சரியாக படிக்கவில்லை எனக் கூறி அவரது தாயார் ஆர்த்தி கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தியோ ஆழிசை
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர், சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி வழக்கறிஞர் மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். மேலும் ஊடகவியலாளராகவும் செயல்பட்டு வந்த அவர் ஊடக பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். சென்னையில் பல்வேறு போராட்டங்களிலும் பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் உருக்கம்
அவரது மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது மகன் தியோ ஆழிசையின் புகைப்படத்தையும் தனது தாயாரின் புகைப்படத்தையும் பகிர்ந்து என் அன்னை அவனை பார்த்துக்கொள்வார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை எடுத்து அவருக்கும் பல்வேறு தரப்பினர் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
